சுவையான சமையல் குறிப்புகள் - 10

சுவையான சமையல் குறிப்புகள் - 10

தேங்காய் சேர்க்கும் பதார்த்தங்கள் அதிக சுவையூட்டுவன என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி சுவைமிக்க ஒரு கலவை சாதமான தேங்காய் சாதம் செய்வதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

முற்றிய தேங்காய் துருவல் - 2 கப்

வடித்த சாதம் - 4கப்

தாளிக்க

தேங்காய் எண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

கடுகு - 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

வறுத்த வேர்க்கடலை அல்லது முந்திரி - 1 டீஸ்பூன்

செய்முறை:

எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும். பின் காய்ந்தமிளகாய், கறிவேப்பிலையை தாளித்து தேங்காய துருவலை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 

பின்னர் வடித்த சாதத்துடன் சிறிதளவு தூள் உப்பு சேர்த்து தாளித்தவற்றைச் சேர்த்துக் கிளறவும். வேர்க்கடலை அல்லது முந்திரியை தனியே  வறுத்து சேர்க்கவும். 

(தொகுப்பு: பொடிசி)

(மெனு ராணி என்று அன்புடன் அழைக்கப்படும் செல்லம்மாள், தமிழகத்தின் பாரம்பரிய சமையல் உணவுகளின் நிபுணர். அனுபவம் வாய்ந்த சமையல் கலைஞர். அவர் அந்திமழை வாசகர்களுக்கு வழங்கும் சுவையான சமையல் குறிப்புகள் வெள்ளி தோறும் வெளியாகும்.  சமைத்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.comக்கு எழுதலாம்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com