சுவையான சமையல் குறிப்புகள் - 11

சுவையான சமையல் குறிப்புகள் - 11

வேப்பம்பூ ரசம் :

வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.வேப்பம் பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டது. வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். வேப்பம் பூவை ஊற வைத்துக் குடித்தால் பித்தம் தீரும். 

 தேவையான பொருட்கள்:

வேப்பம்பூ - 2 கைப்பிடி

புளி - எலுமிச்சை அளவு

உப்பு - தேவையான அளவு

வறுக்க:

காய்ந்தமிளகாய் - 5

பெருங்காயம் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

துவரம்பருப்பு - 2 மேஜை கரண்டி

தனியா - 2 மேஜை கரண்டி

தாளிக்க:

நெய் - 1 மேஜை கரண்டி

கடுகு - 2 டீஸ்பூன்

செய்முறை:

எண்ணெயில் துவரம்பருப்பு, தனியா, காய்ந்தமிளகாய் இவற்றை ஒவ்வொன்றாக கருக்காமல் சிவக்க வறுத்து அரைத்துக் கொள்ளவும். இப்போது புளித்தண்ணீரும், உப்பும் சேர்த்து கொதிக்கவிடவும். புளி வாசனை குறைந்ததும் மற்றொரு பாத்திரத்தில் நெய் காயவைத்து கடுகு, வேப்பம்பூ, பெருங்காயம் தாளித்து இதில் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கவும். 

பொதுவாக ரசம் வைக்கும்போது துவரம்பருப்பைக் கெட்டியாகச் சேர்க்கக்கூடாது. ஒரு கப் வெந்தபருப்புக்கு மூன்று கப் தண்ணீர் சேர்த்து நீர்க்க இருந்தால்தான் சுவையாக இருக்கும். 

தொகுப்பு: பொடிசி)

(மெனு ராணி என்று அன்புடன் அழைக்கப்படும் செல்லம்மாள், தமிழகத்தின் பாரம்பரிய சமையல் உணவுகளின் நிபுணர். அனுபவம் வாய்ந்த சமையல் கலைஞர். அவர் அந்திமழை வாசகர்களுக்கு வழங்கும் சுவையான சமையல் குறிப்புகள் வெள்ளி தோறும் வெளியாகும்.  சமைத்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.comக்கு எழுதலாம்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com