சுவையான சமையல் குறிப்புகள் - 7

சுவையான சமையல் குறிப்புகள் - 7
Published on

சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு

கிழங்கு வகையைச் சேர்ந்த சேப்பங்கிழங்கு நரம்புத் தளர்ச்சியைப் போக்கக் கூடியது. சேப்பங்கிழங்கு மலச்சிக்கலை நீக்கக் கூடியது.  உடலின் கொழுப்பின் அளவைக் குறைக்கும். கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்திருப்பதால் எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும். இதனை  மாதமொருமுறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.  

தேவையான பொருட்கள்:

சேப்பங்கிழங்கு - கால்கிலோ

கெட்டித் தயிர் - 4 கப்

கொத்தமல்லி - சிறிதளவு

வறுக்காமல் அரைக்க:

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

தனியா - 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய் - 4

காய்ந்த மிளகாய் - 4

இஞ்சி - 1 பெரியதுண்டு

தேங்காய் - 1 கப்

தாளிக்க:

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - ஒரு ஸ்பூன்

வெந்தயம் - அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 1

கருவேப்பிலை - சிறிதளவு

மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

சேப்பங்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்.  பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துக் கொள்ளவும். பின் அரைத்த விழுதை தயிருடன் கலந்து ஊற்றவும். சிறுது உப்புப் போட்டு கொதி வந்ததும் சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கவும். 

(தொகுப்பு: பொடிசி)

(மெனு ராணி என்று அன்புடன் அழைக்கப்படும் செல்லம்மாள், தமிழகத்தின் பாரம்பரிய சமையல் உணவுகளின் நிபுணர். அனுபவம் வாய்ந்த சமையல் கலைஞர். அவர் அந்திமழை வாசகர்களுக்கு வழங்கும் சுவையான சமையல் குறிப்புகள் வெள்ளி தோறும் வெளியாகும்.  சமைத்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.comக்கு எழுதலாம்)

logo
Andhimazhai
www.andhimazhai.com