சொல்லப்படாத வாழ்கை

இன்னொருவனின் கனவு -27

தேடல்,தொலைதல்,மீள்தல் இம் மூன்றும் தான் வாழ்க்கை.

இம் மூன்றையும் நிகழ்த்துபவை பயணங்கள்.

ரோலர் கோஸ்ட்டரில் ஏறி உட்காரும் முன் நம் மனம் அதீத படபடப் பில் இருக்கும்.கொஞ்சம் கொஞ்சமாக அது வேகம் எடுக்கும் போது அது நம்மிடம் என்ன மாதிரியான உணர்வை அனுபவத்தை நிகழ்த்துகிறது என்பதை உணரும் போது பயம் ப்ளஸ் உற்சாகம் கலந்த கூச்சல் ஒன்றை எழுப்புவோம்.சந்தோசத்தையும்,அச்சத்தையும்,திகிலையும் மாறி மாறி தொட்டு இறுதியில் அதை விட்டு இறங்கும் போது நம் மனதில் ஒரு ஆழ்ந்த அமைதியும்,சொல்ல இயலா புதுப் பித்தலும் நிகழ்ந்திருக்கும்.

தேடல்,தொலைதல்,மீள்தல் இம் மூன்றையும் நிகழ்த்தும் ஜென் பயண அனுபவம் ரோல்லர் கோஸ்டர் தருவது.எனினும்,சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் அனுபவம்.

வாழ்க்கை என்னும் ரோலர் கோஸ்டர் அனுபவம் மிக நீண்டது.தேடல்,தொலைதல்,மீள்தல் இம் மூன்றும் தொடர்ந்து நிகழும் எனும் நிச்சய சாத்தியக் கூறுகள் இல்லாதது.தேடல் நீடிக்கும் போது அந்த நீண்ட பயணத்தின் சோர்வு நம் மனதை உலுக்க ஆரம்பிக்கும்.திடீரென்று நம் வாழ்வில் ஒரு நாள் நாம் எதன் மீதும் பற்று இன்றி,நாம் செய்து வந்த விஷயங்கள் மேல் வெறுப்புற்று,நம் மேல் வெறுப்புற்று,நம் சுற்றி இருப்பவர் மேல் வெறுப்புற்று,திசை அற்று நிற்போம்.

மிட் லைப் க்ரைசிஸ்(mid life crisis) என்பார்கள் உளவியலில்.

ஆண்கள்,பெண்கள்,,பணக்காரர்கள்,ஏழைகள்,அன்றாடங்காய்ச்சிகள்,மாதசம்பளக்காரர்கள்,வீட்டில் இருப்பவர்கள்,மடத்தில் இருப்பவர்கள்,அறிவு ஜீவிகள்,வியாபாரிகள்,மன்னர்கள்,முனிவர்கள் என்று யாரையும் விட்டு வைத்த தில்லை இந்த மிட் லைப் க்ரைசிஸ்.



எல்லாருக்கும் மிட் லைப் க்ரைசிஸ் வரும் என்பது பொது.எப்படி ஒவ்வொருவரும் அதிலிருந்து மீள்கிறார்கள் என்பது தனி.இதற்கு கோனார் நோட்ஸ் எல்லாம் கிடையாது.எனினும் ஒரு புதிய சந்திப்பு,ஒரு புதிய நீண்ட பயணம்,ஒரு புதிய கட்டவிழ்தல் இந்த நடுவாழ்க்கை பிரச்சனைப் புள்ளியில் இருந்து நாம் வெளி வர நமக்கு உதவக் கூடும் என்று நாம் அறிந்த அறிஞர்கள் சிலரின் அனுபவங்கள் சொல்கின்றன.

அப்படிப் பட்ட ஒரு தொலைதல்,மீள்தல் அனுபவம் தான் நாம் போக இருக்கும் பயணம்.

லாஸ்ட் இன் ட்ரான்ஸ்லேஷன் (lost in translation-2003).

காட் பாதர் இயக்குனர் பிரான்சிஸ் போர்ட் கோப்போலா ஒரு முறை தன்னுடைய காரில் மனைவியுடன் பயணம் செய்து கொண்டிருந்த போது,வழக்கமாக எல்லாருக்கும் ஏற்படும் ஒன்று அங்கேயும் நிகழ்ந்தது.அது வாக்குவாதம்.பேச்சு முற்றி நாம் திருமணம் செய்து கொண்டதே தவறு என்கிற ரீதியில் கொப்போலா வும் அவர் மனைவியும் சத்தம் போட ஆரம்பித்த வுடன் 'கட்' என்று பின் சீட்டில் இருந்து ஒரு குரல் வந்தது.அது அவர்களுடைய பெண் குழந்தை.'கட்' என்று அந்த மகா 'கட் ' மனிதருக்கே 'கட்' சொன்ன அப் பெண் குழந்தையின் வயது மூன்று.

சோபியா கோப்போலா.Sofia Carmina Coppola

சோபியா கோப்போலா வின் இரண்டாவது படம் தான் lost in translation.

அகடமி விருதுக்காக இயக்குனர் பிரிவில் பரிந்துரைக்கப் பட்ட முதல் அமெரிக்கப் பெண்.சிறந்த மூல திரைக் கதைக்கான அகடமி விருதை lost in translation படத்திற்கு வென்றவர்.

விருப்பமோ,இல்லையோ,சினிமா தான் குடும்பம்,வாழ்க்கை,கனவு என்பதாக ஆசீர்வதிக்கப் பட்ட கனவுக் குழந்தை சோபியா.காட் பாதர் திரைப் படத்தில் விட்டோ கரோலின் னின் பேரக் குழந்தையாக மார்லன் பிராண்டோவின் கரங்களில் தவழ்வதில் ஆரம்பித்தது சோபியா வின் சினிமா சம்பந்தம்.அப்போகேலிப்ஸ் நவ்(Apocalypse Now-1979) என்கிற தன் அப்பாவின் பட ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது,பனைமரங்களையும்,ஹெலிகாப்டர்களையும் வரைந்து கதைகள் சொல்லப் பழகியிருந்தாள் சோபியா.அப்போது அவளுக்கு வயது ஆறு.நடிகை.சோபியாவின் கணவர் (முன்னாள்) ஆன ஸ்பைக் ஜோன்ஸும்(Spike Jonze- Being John Malkovich-1999, Adaptation-2002),பிரபல இயக்குனர் தான்.அவருடைய Adaptation-2002,நிகோலஸ் கேஜ் நடித்த மிகச் சிறந்த இரட்டையர் சினிமா. பேஷன் டிசைனர்,மாடல்,கேபிள் டிவி டாக் ஷோ ஹோஸ்ட்,என்று எல்லாவற்றிலும் நுழைந்து வெளியே வந்த சோபியாவின் டீன் ஏஜ் அலைதல்,ஓரளவு நிலைத்து நின்றது,அவளுடைய பேஷன் டிசைனில்தான்.ஜப்பானுக்கு அடிக்கடி பயணம் போக வேண்டி இருந்தது,அது காரணமாக.சோபியா வடிவமைத்த மில்க் பெட்(milk fed)என்னும் பேப்ரிக்(clothing line)இன்றும் ஜப்பானில் கிடைக்கிறது.,அதிலுருந்து அவருக்கு பணமும் கிடைக்கிறது. ஜப்பான்(டோக்கியோ) சோபியாவின் விருப்பமான இடமாக ஆனதற்கு,அதன் மேற்கத்திய வாழ்க்கையில் இருந்து முற்றிலும் விலகிய அம்சங்கள் தான்.அதன் தனிமையும்,அந்த மக்களின் அமைதியும்,எறும்பு போல சுறுசுறுப்பாக அலையும் அவர்களின் வாழ்வும் சோபியா வை மிகவும் ஈர்த்தன.அவர்களின் மொழி தாண்டி பிற வற்றில் ஜப்பானியர்கள் காட்டிய அக்கறையின்மை அவளுக்கு இம்சை அனுபவங்களைத் தந்தாலும் பிடித்திருந்தது.



தன்னை பாதிக்கும்,ஈர்க்கும் விசயங்களையே செய்து பழக்கப் பட்ட சோபியா சினிமா இயக்குனர் ஆனதும் அப்படித் தான்.சமகால மாபெரும் சாதனையாளர் ஆக இருந்த தன் தகப்பனின் நிழலைத் தாண்டி,அவருடைய சினிமா பாணியைத் தாண்டி தனக்கு என ஒரு சினிமா பாணி அமையக் காரணம் தன் கன்னாபின்னா அலைதலே என்கிறார் சோபியா டைம் பத்திரிகைக்கு அளித்த நேர்காணல் ஒன்றில்.பேஷன்,காஸ்ட்யூம்,டாக் ஷோ ஹோஸ்ட்,போட்டோ க்ராபி என்று எல்லாவற்றிலும் ஆர்வமும்,அனுபவமும்,இருந்தாலும்,அவை எதிலும் தனித்து சிறந்தவள் இல்லை தான் என்கிறார் சோபியா.ஆனால்,அதுவே,தான் அறியப் படுகிற இயக்குனர் ஆக உருவாகவும் காரணம் என்கிறார்.The Virgin Suicides (Jeffrey Eugenides' novel)-தி வர்ஜின் சூசைட்ஸ் என்னும் நாவல் அவர் யதேட்சை ஆகப் படித்தது.படித்து முடித்தவுடன் யாருடனும் பேசாமல் தனித்து அதைப் பற்றிய ஞாபகங்களுடன் அவரை மறுபடியும் அலைய வைத்தது.அந்த நாவலுக்கு யார் உரிமம் வாங்கி வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி எல்லாம் யோசிக்காமல் அந்த நாவலுக்கு சினிமா வடிவம் கொடுக்க ஆரம்பித்தார்.யாருடைய திரைக் கதை பாதிப்பும் அற்ற பாணி அவருடையது என்று அறியப் படுவதன் ஆரம்பம் தி வர்ஜின் சூசைட்ஸ்-The Virgin Suicides (1999).உயர் நடுத்தர வர்க்கத்தில் பிறந்த ஐந்து சகோதரிகளின் தற்கொலைகள்,அதன் காரணங்கள் குறித்த அப் படம் அவரை உலக சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தது.

ஜப்பான்,மிட் லைப் க்ரைசிஸ்,ப்ளஸ்,வாழ்க்கைன்னா என்ன என்று கேட்கும் இளம் பெண் ஒருவளின் ஹாட் மிக்ஸ் தான் அவருடைய அடுத்த படம் Lost in Translation(2003).அவரின் மிகச் சிறந்த சினிமா.

ஜப்பான்,பில் முர்ரே (Bill Murray),ஸ்கார்லெட் ஜகான்ஸன்(Scarlett Johansson) ஹாட் மிக்ஸ்.

நடு வயது சோர்வு காரணமான பிரச்னை யுடன் எப்படி இருக்கப் போகிறது தன் வாழ்வு என்கிற ஆரம்ப வயது பிரச்னை,மொழிப் பிரச்னை கொண்ட அந்நிய உலகத்தில் சந்திக்கும் அனுபவங்கள் என்கிற ஒன் லைன் எனக்கே மிகவும் ஆர்வம் அளிப்பதாக இருந்தது.ஏனென்றால் அந்த ஆரம்ப இருபது வயது பிரச்னையின் உருவமாக அப்போது நான் இருந்தேன் என்கிறார் சோபியா கோப்ப்போலா.உண்மையில் அது அவருக்கும்,அவரது அப்போதைய பிஸி கணவர் ஆன ஸ்பைக் ஜோன்ஸ் க்கும் இடையேயான பிரச்னையும் தான் என்கிறார்கள் அமெரிக்க பப்பராசிகள்.,சோபியா அதை மறுத்த போதும்.

ஒருக்களித்து,நமக்கு முதுகு காட்டிப் படுத்திருக்கும்,இளம் பெண் ஒருத்தியின் உள்ளாடை அணிந்த பின்புறங்களில் இருந்து ஆரம்பிக்கிறது மொழி பெயர்ப்பில் நம்மைத் தொலைக்கப் போகும் சோபியா கோப்போலா வின் லைப் டூர்.அப் பெண்ணின் வளைவுகளில் ஆழ் உறக்கத்திற்கான சின்ன சின்ன அசைவுகள்.அதே நேரத்தில்,வெல்கம் டு நியூ இன்டர்நேஷனல் ஏர்போர்ட் ஆப் டோக்கியோ,என்கிற விமான நிலைய அறிவிப்பாளினியின் குரல்,தொடர்ந்து,மெல்லிய ஹம்மிங்குடன்,அந்த கார் டோக்கியோ நகர் சாலைகளில் புகும் காட்சி,ஒளிரும் நகரம்,அதன் நியான் விளக்குகள்,விளம்பர பலகைகள்,ஒரு விஸ்கி விளம்பர வினைல்ஹோர்டிங் ,தூக்கக் கலக்கத்துடன் அதை ஏறிட்டுப் பார்க்கும் முர்ரே,அது சென்றடையும் ஹோட்டல் பார்க் ஹயாத்,அங்கு அவருக்கு கிடைக்கும் ஜப்பானியர்களின் உலகப் பிரசித்தி பெற்ற வரவேற்பு,அவருக்காக காத்திருக்கும் ஜப்பானிய குழு ஒன்றுடன் சின்ன அறிமுக உரையாடல்,மனைவியிடம் இருந்து வந்திருக்கும் சின்ன குறிப்பு'பாப்,நம் மகனின் பிறந்த நாள்,மறந்து விட்டாய்',சின்ன ஆசுவாசப் பெருமூச்சு,எலிவேட்டர் பயணம்,அறை.உடை மாற்றி,நைட் டிரெஸ் ஸில் அக்கடா என்று காட்டுக்குள் புதிதாக வந்த கரடி போன்ற அப்பாவி லுக் உடன் அவர் அமர்ந்திருக்கும் காட்சி,அது மெல்ல நழுவி,பியானோ இசையின் வழிசலில் 'உன் கரங்களில் நான்,என்னை முத்தமிடுகிறாய் நீ ' என்று மெல்லிய குரல் எடுத்து பாட ஆரம்பிக்கும் மேற்கத்திய பெண் ஒருத்தியின் உதடுகளில் விழுந்து,மெல்ல அந்த பாருக்குள் அலைகிறது.சில நண்பர்கள்,சிலஜோடிகள்,தனியாக சில பேர்,அதில் நம்ம ஆள் ஒருவர்.'அவரைப் பார்,நம்ப முடிகிறதா? அவர்தானே,இரு,நான் அவரிடமே கேட்கிறேன்',கிசுகிசுக்கும் அந்த இரு ரசிக குரல்கள்,அதில் ஒன்று 'பாப் ஹாரிஸ்,நீங்க என் ஆல் டைம் பேவரிட்,உங்க அந்த ஆக்சன் படம்,சான்ஸே இல்ல'என்கிறது.மெல்ல அங்கிருந்து விஸ்கி கிளாஸ்,உதட்டில் புகையும் சிகார் உடன் நகர்கிறார் பாப்.அடுத்த காட்சி படுக்கையில் கைகளை விரித்து அவர் ஒரு கேள்விக் குறி போல் விழுந்திருக்கும் டாப் ஆங்கிள் ஷாட்.ஆமாம்,அந்த புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரின் இப்போதைய மன நிலை. ஒரு கேள்விக் குறி.மணி 4:20 என்று காண்பிக்கிறது.இன்னும் அவருக்கு தூக்கம் வரவில்லை.அந்த நேரத்தில் டப டப என்று அறை முழுக்க பேக்ஸ் மெஷின் இயங்கும் சத்தம்.மலங்க மலங்க விழிக்கிறார் பாப்.அவரது மனைவியிடம் இருந்து மறுபடியும் சிறு குறிப்பு'பாப் உன் ஸ்டடி ரூமுக்கு என்ன மாதிரியான செல்ப் வேண்டும்?,மாதிரிப் படங்கள் அனுப்பி இருக்கிறேன்,தேர்வு செய்து அனுப்பு'.மலங்க மலங்க விழிக்கிறார் ,இப்போது சின்ன பெருமூச்சுடன் நம்ம பாப். தொடர்வது,ஒரு பயங்கரமான குறட்டை ஒலி,இன்னொரு இடம்,இன்னொரு காட்சி,ஜன்னலில் உட்கார்ந்த படி,தூங்கும் தன் கணவனை உற்றுப் பார்க்கிறாள் அந்த இளம் பெண்,சார்லெட்(Charlotte),ஸ்கார்லெட் ஜோகான்சன்.

சோபியாதனதுதிரைக்கதையை,காட்சிஅமைப்புகளை,இசையை,தன்கதாபாத்திரங்களின்பேச்சுக்களை,வசனங்களை,உடல்மொழியைஅவருக்கேயானசொந்தஅன்றாடதெருமுனைஅனுபவங்களில்இருந்துபெறக்கூடியமனம்கொண்டவர்.அதுஉட்கார்ந்து,விவாதித்து,அல்லதுஒருபுத்தகமறுபதிப்பில்இருந்துபெறும்சினிமாஅனுபவத்தில்இருந்துகண்டிப்பாகவிலகி,வித்தியாசம்கொண்டதாகஇருக்கும்.

பாப்ஹாரிஸ்(பில்முர்ரே) வயதாகிக்கொண்டிருக்கும்அமெரிக்கநடிகர்.விஸ்கிவிளம்பரம் (Suntory whisky)ஒன்றில்நடிப்பதற்காகடோக்கியோவந்திருக்கிறார்.இரண்டுமில்லியன்டாலர்அதன்மூலம்அவருக்குகிடைக்கும்.சார்லெட் (ஸ்கார்லெட்) அப்போதுதான்தன்கல்லூரிவாழ்க்கையில்இருந்துவெளியேவந்திருக்கும்புதிதாகமணமானஇளம்பெண்.அவளுடையகணவன்ஒருபேஷன்மற்றும்பிரபலமாடல்போட்டோகிராபர்.வேலை,வேலைஎன்றுஅலைந்துகொண்டிருக்கும்ஒர்க்கஹாலிக்.அவனும்அசைன்ட்மெண்ட்ஒன்றிற்காகடோக்கியோவந்திருக்கிறான்.தனிமையில்விடப்படும்சார்லெட்,தனிமையைஉணரும்பாப்ஹாரிஸ்இரண்டுபேரும்சந்தித்துக்கொண்டால்?அதுவும்அதைவிடமொழித்தனிமைதரும்டோக்கியோவில்?

பாப்ஜப்பானியவிளம்பரஇயக்குனருடனும்,அவருடையஆங்கிலமொழிபெயர்ப்பாளர்உடனும்அவஸ்தைப்படும்அந்தவிஸ்கிவிளம்பரஷூட்டிங்காட்சிகள்,அவருக்காகஅறைக்குமசாஜ்செய்யஇன்னும்ப்ளாப்ளாஎல்லாம்செய்யஅனுப்பப்படும்ஜப்பானியஅழகியுடன்,அவளதுஆங்கிலத்துடன்படும்இம்சைகள்,ரோஜர்மூர்,சீன்கானரி,007,என்றுவிதவிதமானலுக்கொடுக்கசொல்லிஅவரைப்படுத்திஎடுக்கும்விளம்பரபோட்டோக்ராபரைசமாளிக்கும்விதம்,ஜப்பானியமொழியில்இயங்கும்பிட்னஸ்மெஷினில்ஏறிஇறங்கமுடியாமல்அவர்முழிக்கும்முழி,எல்லாம்உங்கள்புன்னகைக்குநூறுசதவிகிதசோபியாகாரண்டி.அசத்திஇருப்பார்பில்முர்ரே.தனதுஸ்க்ரிப்ட்முடிந்தவுடன், பில்முர்ரேதான்தனதுமிட்லைப்க்ரைசிஸ்கதாநாயகன்என்றுமுடிவுசெய்து,தொடர்ந்துஎட்டுமாதங்கள்,அவரைஇமெயில்,மொபைல்,நேரில்என்றுஅலைந்துஒத்துக்கொள்ளவைத்தவர்சோபியா.

சார்லெட்டுக்குஇந்ததனிமைபுதுமையாக,சகித்துக்கொள்ளமுடியாததாக,கண்களில்நீரைவரவழைப்பதாகஇருக்கிறது.அவளதுகணவன்வெளியில்சென்றவுடன்கிளம்பி,சைட்சீயிங்குக்குசெல்கிறாள்.அதுஒருஜப்பானியபுத்தவிஹாரம்.அங்குஒலிக்கும்இசையும்,ஒலிகளும்அவளைஒன்றுமேபாதிக்கவில்லை,கல்போல்ஆகிவிட்டோமோ,உணர்வுகள்அற்றுஎன்றகுற்றஉணர்ச்சியுடன்,அறைதிரும்பி,தொலைபேசியில்யாரிடமோஅதைஉணர்த்தமுனைகிறாள்,ப்ளீஸ்ஹேங்ஆன்ஒன்செகண்ட்என்கிறஅளவில்தான்மறுமுனைபுரிதல்இருக்கிறது.உடைந்துபோகிறாள்சார்லெட்.அன்றுஇரவுபாரில்அவள்பாப்அமர்ந்திருப்பதைப்பார்க்கிறாள்.அவரைஅடையாளம்கண்டுகொண்டு,அவருடையடேபிளுக்குதன்சார்பாகஒருசின்னவெல்கம்ட்ரின்க்கொடுத்துஅனுப்புகிறாள்.பாப்அதைஏற்றுக்கொண்டுசின்னசந்தோசம்தெரியசைகைசெய்கிறார்.அந்நியதேசத்தில்,அலையும்இருமனங்களின்சிநேகஇழைதுளிர்விடஆரம்பிக்கிறது.அந்தமனங்களின்தனித்தனிமீள்அனுபவம்,டோக்கியோநகரவீதிகளில்இருவரும்ஒன்றாகதொலைவதில்நிகழ்கிறது.

படப்பிடிப்புக்காகடோக்கியோவரும்போதே,அதன்ரோட்மேப்கள்,சப்வேஅடையாளங்கள்,டோக்கியோநகரின்ஸ்டில்புகைப்படங்கள்,வானிலைமுன்தகவல்கள்எல்லாவற்றுடன்வந்துவிட்டார்சோபியா.முடிந்தவரைஇயல்பாகஇருக்கும்ஒளியையேஉபயோகப்படுத்துவதுஎன்றுமுடிவுசெய்தார்.வேறொருஷாட்எடுக்கும்போதுதிடீர்என்றுமழைபெய்தால்பதினைந்து,இருபதுநிமிடங்களுக்குள்மழையைஉபயோகப்படுத்திவேறுஷாட்எடுத்தார்.குறைந்தஎண்ணிக்கையில்உள்ளபடப்பிடிப்புகுழுஅதற்குஉதவியது.ஜப்பானியமக்கள்நேராககண்களைச்சந்திக்கும்பழக்கம்இல்லாதவர்கள்என்பதால்,இயல்பாகஅவர்களுக்குள்புகுந்துசப்வேக்களில்,ட்ரெயின்களின்உள்ளே,ஜனசந்தடிமிக்கவீதிகளில்என்றுடோக்கியோவைஅதன்இயல்புடன்காட்சிப்படுத்தமுடிந்தது.35 mm Aatonகேமராவில்படம்பிடிக்கப்பட்டாலும்,சிலகாட்சிகளுக்கு,ஹைஸ்பீட்பிலிமும்உபயோகப்படுத்தப்பட்டது.மொத்தம் 27 நாட்களில்லாஸ்ட்இன்ட்ரான்ஸ்லேஷன்சோபியாவால்முடிக்கப்பட்டது.

எனினும்,எங்களைநடிக்கச்சொல்லிவிட்டுகாத்திருக்கும்போது,அவர் 'கட்' சொல்லும்அவசரத்தைஎன்றுமேவெளிப்படுத்தியதில்லை,எங்களுடையஅருமையானதருணங்கள்வெளிப்படும்வரைஅவர்காத்துக்கொண்டேஇருந்தார்என்கிறார்ஸ்கார்லெட்ஜோகான்ஸன்.இருபத்துநான்குவயதுஇளம்பெண்ணாகஇதில்நடிக்கசோபியாவால்அழைக்கப்பட்டபோதுஸ்கார்லெட்டுக்குவயதுபதினெட்டு.நாங்கள்இருவரும்ஒரேமாதிரிஇருந்தோம்என்பதைஒவ்வொருநாளும்படப்பிடிப்புதளங்களில்யாராவதுசொல்லிச்செல்லும்போதுஉண்மையில்எனக்குசிரிப்பாகவும்,ஆச்சர்யமாகவும்இருக்கும்,ஏனெனில்அதுஉண்மைஎன்பதுஎங்கள்இருவருக்கும்,முதலிலேயேதெரியும்என்கிறார்ஸ்கார்லெட்டைம்பேட்டியில்.அப்படிஒருஉருவஒற்றுமைசோபியாவுக்கும்,ஸ்கார்லெட்டுக்கும்இருந்தது.அந்தகதாபாத்திரமேசோபியாதான்என்றுபப்பராசிகள்என்றுசொல்வதில்உண்மைஇருக்கக்கூடும்.ஸ்கார்லெட்டைநடிப்பில்,மதிப்பில்,வேறொருதளத்திற்குகொண்டுசென்றபடம் lost in translation.ஸ்கார்லெட்டுக்குசிறந்தநடிகைக்கான BAFTAவிருதுஇப்படத்திற்காகக்கிடைத்தது.4 மில்லியன்டாலர்செலவில் 120 மில்லியன்வசூல்அள்ளியசோபியாவின்புதையல்வேட்டைலாஸ்ட்இன்ட்ரான்ஸ்லேஷன்.

பாப்ஹாரிஸ்,சார்லெட்இருவருக்கும்பூக்கும்நட்பூசெக்ஸ்சார்ந்ததுஅல்ல,எனினும்அதில்கண்டிப்பாகமெல்லியரொமான்ஸ்இழைஓடிக்கொண்டேஇருக்கும்,படம்முழுதும்.குட்பைசொல்லும்நேரமும்வரும்எந்தஒருஅற்புதசந்திப்பின்போதும்,அதன்பிரியத்தின்போதும்.அந்தப்பிரிதல்பாப்கிளம்பவேண்டியசூழ்நிலையில்வருகிறது.அதற்குமுன்அவர்கள்இருவருக்கும்இடையேசின்னமனசங்கடம்ஒன்றுவேறுநிகழ்ந்திருக்கிறது.ஹோட்டலில்அவளிடம்குட்பைமட்டும்சொல்லிவிட்டுக்கிளம்பும்பாப்ஏர்போர்ட்டுக்குச்செல்லும்வழியில்,டோக்கியோஜனநெருக்கடிக்குநடுவேசார்லெட்டைமீண்டும்பார்க்கிறார்.உடனே,டாக்சியைவிட்டுஇறங்கி,ஓடி,அவளின்தோள்அணைத்து,அவள்காதில்ஏதோமுணுமுணுக்கிறார்.முத்தமிட்டுபிரிகின்றனர்இருவரும்.அவர்கிசுகிசுத்ததுஒருஜோக்ஆகஇருக்கலாம்,சார்லெட்பற்றியஇனியகுறிப்புஅல்லதுகவிதைஆகஇருக்கலாம்,அல்லதுஅவர்கள்மறுபடிஎப்போதுசந்திக்கப்போகிறார்கள்என்பதுபற்றியதிட்டம்ஆகஇருக்கலாம்.ஆனால்,அவர்கள்சேர்ந்தும்,தனித்தனியாகவும்தங்களைமீட்டுஎடுத்திருக்கிறார்கள்,தத்தம்தனிமையில்இருந்து. அதற்குஅவர்களுக்குஉதவியாக,சாட்சியாகஇருந்ததுடோக்கியோவும்,அதன்மக்களும்,அவர்களின்வாழ்க்கையும்.

ஏனெனில்,எல்லாகிராமத்திற்கும்,எல்லாஊருக்கும்,எல்லாநகரத்திற்கும்,பின்னால்சொல்லப்படாதவாழ்க்கையும்,அதைப்பற்றியஇசையும்,கவிதையும்,கதையும்இன்னமும்காத்துக்கொண்டிருக்கிறது, யாருக்கும்,அவர்கள்அறிந்திராதஉற்சாகத்தைமீட்டுக்கொள்ள.

ஒருபயணம்மட்டுமே,அதைச்சாத்தியப்படுத்தும்.

இன்னொருவனின்கனவு - தொடரும்

- குமரகுருபரன்
திங்கள்தோறும்இரவுகுமரகுருபரனின்'இன்னொருவனின்கனவு' அந்திமழையில்வெளிவரும்....

'இன்னொருவனின்கனவு' பற்றியஉங்கள்கருத்துக்களை content(at)andhimazhai.com என்றமுகவரிக்குஅனுப்பவும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com