எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் சூட்சுமம்

தங்கச்சுரங்கம் – 15
எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் சூட்சுமம்
Published on

பிரபலமான பெயரைத் துறந்துவிட்டு புதிய பெயரைப் பிரபலப்படுத்துவது அவ்வளவு சுலபமல்ல.

சில வருடங்களுக்கு முன் இந்தியாவில் 'Lenovo' என்ற பெயர் யாருக்கும் தெரியாது என்று சொன்னால் கூட தப்பாகாது.

1984 ஆம் ஆண்டு பதினொன்று இன் ஜினியர்கள் சேர்ந்து பதினொன்று லட்சம் முதலீட்டில் ஆரம்பித்த நிறுவனம் தான் 'Lenovo' . லெனோவா ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கொடிகட்டிப் பறந்த IBM நிறுவனம் உலகின் முன்னணி கம்ப்யூட்டர் விற்பனையாளர்.

Lenovo நிறுவனத்தின் ஆதர்ஷமாக விளங்கிய IBM நிறுவனத்தை விலைக்கு வாங்கும்
வாய்ப்பு Lenovo விற்கு கிடைத்தது. காலம் டிசம்பர் 2004.

IBM நிறுவனத்தின் கம்ப்யூட்டர் தயாரிப்பு பிரிவை விலைக்கு வாங்கலாமா என்ற
யோசனையிலிருந்த நிறுவனம் உலகின் பல்வேறு பகுதியைச் சார்ந்த 4000 வாடிக்கையாளர்களிடம் ஒரு கேள்வியை முன் வைத்தது. IBM கம்ப்யூட்டர்கள் 'Lenovo' என்ற பெயரில் விற்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி தான் அது.

தரம் குறைந்துவிடுமா? புதிய தொழில் நுட்ப முன்னேற்றங்கள் தொடருமா? என்பதான கேள்விகள் வாடிக்கையாளர்களிடமிருந்து வந்து குவிந்தது.

மே, 2005 Lenovo , IBM நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு அழுத்தமாக சொன்ன விஷயம் " எதுவும் மாறிவிடவில்லை. இது வரை உங்களுக்கு கிடைத்த அதே தரம் , அதை தயாரித்த மனிதர்கள் என்று எல்லாம் முன்பிருந்தது. தான் , பெயரைத் தவிர" என்ற செய்தியை Lenovo திரும்பதிரும்ப விளம்பரங்கள் மூலம் உரக்கக் கூறியது.

ஆரம்பகால விளாம்பரங்களில் IBM மற்றும் Lenovo வின் பெயர்களும் இணைந்து வந்து கொண்டிருந்தது.

பிராண்டுகளின் பெயர் மாற்றத்தின் போது கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன.

பிராண்டின் பெயர் , வெறும் பெயர் மட்டுமல்ல வாடிக்கையாளர்களுக்கு பிராண்டின் பெயர் ஒரு அனுபவத்தை , பல விஷயங்களை ஞாபகத்திலிருந்து இழுத்து வரும்.

புதுசோ பழசோ எதுவாயினும் பிராண்டின் பெயர் வாடிக்கையாளர்களுக்கு அந்த அனுபவத்தைத் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

'Lenovo' மேற்கொண்ட ஆய்வின் மூலம் வாடிக்கையாளர்கள் புதுமையான (innovative) கம்ப்யூட்டர்களை IBM மிடமிருந்து எதிர்பார்க்கிறாகள் என்று புரிந்து கொண்டதால் அதை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

IBM நிறுவனத்தின் பெயர் மிகப்பெரிய பிராண்டாக இருந்தது போல் Think Pad என்று அழைக்கப்பட்ட IBM ன் லாப்டாப்பும் மிகப்பெரிய பிராண்டு தான்

Think Pad பிராண்டை பெயர் மாற்றாமல் அப்படியே விற்கத் தொடங்கியது Lenovo நிறுவனம்.

அடுத்து விளம்பரம் பட்டையை கிளப்பியது. மும்பை நட்சத்திரங்கள் நடித்த Lenovo விளம்பரங்கள் பிரைம் டைமில் சானல்களை ஆக்கிரமிக்க வியாபாரம் சூடு பிடித்தது.

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு சதவீதத்திற்கும் குறைவான இந்தியர்களுக்கு தெரிந்திருந்த 'Lenovo' பிராண்டு கம்ப்யூட்டர்களை தற்போது 74 சதவீத அறிமுகம் கிடைத்திருப்பதாக ஏ.சி. நெல்சன் ஆய்வு கூறுகிறது.

ஒன்றுமில்லாத நிலையிலிருந்த வாடிக்கையாளர் மனதிற்குள் Lenovo மாறிய கதை கூர்ந்து பார்க்கும் போது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சூட்சுமம் புரியும்.

- ந.இளங்கோவன்

(இன்னும் வரும்)

மே 11, 2007

logo
Andhimazhai
www.andhimazhai.com