தமிழுக்கு வரும் இந்தி எழுத்தாளர்கள் -12

தமிழுக்கு வரும் இந்தி எழுத்தாளர்கள் -12

இந்தி எழுத்தாளர்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சி இது. வாரம் ஒரு எழுத்தாளரை அறிமுகப்படுத்துவதுடன் அவரது கதையொன்றை மொழிபெயர்த்து தருகிறார் மதியழகன் சுப்பையா.

பகவதிச்சரண் வர்மா : (1903-1981)

பகவதிச்சரண் வர்மா இந்தி இலக்கிய உலகில் கவிஞராகவும், நாவலாசிரியராகவும், கதாசிரியராகவும் பிரபலமாகி உள்ளார். இவரது எழுத்துகளில் முற்போக்குக் கருத்துகளும் எதார்த்த நிலைகளும் மனித மனங்களும் வார்த்தைகளாக வழங்கப்பட்டிருக்கிறது. மனிதர்களின் போலித்தனங்களையும் அவர்தம் ஆடம்பர வாழ்வையும் மிக இயல்பாய் பல கதைகளில் சொல்லி விட்டு சென்றுள்ளார்.

சமூகத்தின் முக்கியப் பிரச்சனைகள் மற்றும் அவலங்களைப் பற்றிய எண்ணங்களை இவரது கதைகளில் வெளிப்படுத்தி உள்ளார். இவரது கதைகளில் உயர் மற்றும் மத்திய வர்க்க மக்களின் போலித்தனங்கள் பெரிதும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

கதை சொல்லலில் புதிய யுத்தியும் பெரும்பானக் கதைகளில் வர்ணனை யுத்தியில் கதை சொல்வதும் இவரது சிறப்பு அம்சம். இவரது கதைகள் படிப்பவரை மிக செல்லமாய் கிள்ளி விட்டுப் போவதைப் போலவும் இவரது கதாப்பாத்திரங்கள் இருக்கலாம் என கற்பனை செய்து கொள்ளும் படியாக அமைவது மிகு சிறப்பு.

பொருட்கள் மற்றும் வரலாற்றுச் சிந்தனை மற்றும் புதுமை என்ற தத்துவார்த்தங்களில் இவரது கதைகள் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் இவரது நாவல்களிலும் புதுமையும் எதார்த்தமும் விரவி வருவது தனிச் சிறப்பு.

பரிசுகள் பாராட்டுகள் மற்றும் விருதுகளுக்கு சொந்தக்காரராகவும் உள்ளார். இவரது படைப்புகள் இளநிலைக் கல்லூரி மற்றும் மேல் நிலைப் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத் தகுந்தது.

இவரது படைப்புகளில் '' சித்ரலேகா' 'புலே-பிஸ்ரே சித்ர' 'தகே பாவ்' ' சப்ஹி நசாவத் ராம் குசாயி' 'ஆக்ரி தாவ்' ' சமர்த் அவுர் சீமா' ' சீதி சச்சி பாத்' 'டேடே மேடே ராஸ்தே' ' ரேகா' (நாவல்) ' தோ பாங்கே'' 'இன்ஸ்டால்மென்ட்'' ஆகியன முக்கிய படைப்புகளின் தொகுப்புகளாகும்.

இவரது கதைகளை படித்த நண்பர்கள் பலர் இவர் கதைகளின் கதாபாத்திரங்கள் தங்களை போலவே சித்தரிக்கப் பட்டுள்ளதாக கூறி இவரை விட்டு விலகிய வேடிக்கையும் உண்டு. ஆனாலும் கதையில் எந்த ஜிகினா வேலையும் செய்யாமல் சோதனை என்ற பெயரில் சோதிக்காமல் மிக எளிமையான படைப்புகளை தந்து சென்றுள்ளமைக்கு நாம் நன்றி சொல்லலாம்.

தவமுறை

இந்தியில்: பகவதிச்சரண் வர்மா
தமிழில்: மதியழகன் சுப்பையா



சாயாவின் கோப்பையை வாயில் வைத்ததுதான் தாமதம் எனக்கு வண்டியின் ஹார்ன் ஒலி என் செவியில் விழுந்தது. வாராண்டாவுக்கு வெளியே வந்து பார்த்தேன். சவுதரி விஷ்வம்பர்ஷகாய தனது புதிய ஷெவ்ரலே சிக்ஸ் வண்டியில் கௌரவமாக அமர்ந்தபடி மின்சார ஹாரனை ஒலிக்கச் செய்து கொண்டிருக்கிறான். என்னைப் பார்த்ததும் "ஹலோ, குட் ஈவ்னிங் சுரேஷ்" என்றபடி காரிலிருந்து கீழே இறங்கினான்.

"குட் ஈவ்னிங் சவ்தரி சாஹப் ! இப்பதான் சாயா குடிக்க உட்கார்ந்தேன் அதற்குள் நீங்கள் வந்து விட்டீர்கள். நல்ல சமயமாகத்தான் வந்திருக்கிறீர்கள்"

சவ்தரி விஷ்வம்பர்சகாய வாட்டசாட்டமான உடற்கட்டோடு உயரமான வாலிபனாக இருந்தார். அவருக்கு வயது இருபத்தைந்து இருக்கும். பழுப்பு நிறம், முகம் நீளமாகவும் முகத்தின் அமைப்பு அழகாகவும் இருந்தது. தலைமுடியை நடுவகிடு எடுத்து வாரியிருந்தார். காதுக்கும் கீழேவரை கிர்தாவும் வைத்திருந்தார். தாடி மீசை பகுதிகள் பளிச்சென்று சுத்தமாக இருந்தது. முகத்தில் கிரீம் மற்றும் பவுடரின் மெல்லிய பூச்சு தெரிந்தது. அவர் அலசலான பட்டுத் துணியில் ஷேர்வானி அணிந்து இருந்தார். அவருடைய தொப்பியும் அதே துணியில் செய்யப்பட்டதாக இருந்தது. தொப்பியை அவர் கையில் வைத்து இருந்தார். பளபளக்கும் பைஜாமா மாட்டியிருந்தார். அதன் பேட்டன் தோலாலான கிரேஷியன் பப் வகையைச் சேர்ந்தது.

சவ்தரி விஷ்வம்பர்சகாயாவின் தந்தை ஹர்சகாயா அப்பகுதியின் சிறிய தாலுக்காராக இருந்தார். விஷ்வம்பர்சகாயா அவரது தந்தைக்கு ஒரேஒரு வாரிசாக இருந்தார். ஆனால் சண்டையிட்டுக் கொண்டு அவர் தனியே வந்துவிட்டார். தந்தை மகன் இருவரின் குணத்திலும் ஆழ்ந்த கருத்து வேறுபாடு இருந்து வந்தது. தந்தை அமைதிக்குழுவின் அவைத் தலைவராக இருந்தார். மகனோ எப்பொழுதாவது கதர் அணிந்து கொண்டு காங்கிரஸ் மேடையில் இருந்தபடி வியாக்கியானம் வழங்கிக் கொண்டிருந்தான்.

இதன் முடிவு தெளிவாய் தெரிந்த ஒன்றுதான். ஒருமுறை மகன் தந்தையை தோட்டத்தில் வைக்கோல் நிறைத்து வைக்கும் அறையில் அடைத்து வைத்து விட்டார். பின் தான் ஊருக்குள் திரும்பி வரப் போவதில்லை என உறுதி எடுத்துக் கொண்டு நகரத்தை நோக்கி நடையைக் கட்டினார். ரெண்டு மணி நேரங்கள் வரை அவரைக் காணமல் எல்லா இடங்களிலும் அலசி தேடி இறுதியாக சவ்தரி ஹர்சகாயா அந்த வைக்கோல் போட்டு வைக்கும் அறையில் இருந்து மீட்கப் பட்டார்.

தனது மகனின் அறிவுகெட்டத்தனத்தால் சவ்தரி ஹர்சகாயாவுக்கு கடும் கோபம் வந்தது. உடனடியாக அவர் தனது கைத்துப்பாக்கியை எடுத்தார். கணவனின் இந்த உக்கிரமான ரூபத்தைக் கண்ட சவ்தராயின் சாஹிபா அதாவது சவ்தரி ஹர்சகாயாவின் தர்ம பத்தினி அல்லது சவ்தரி விஷ்வம்பர்சகாயாவின் அம்மா ராகத்துடன் அழத்துவங்கினாள். தனது மனைவி இவ்வாறு தனியாக அழுவது சவ்தரி சாஹேப்பிற்கு நலமாகப் படவில்லை, அதனால் அவரும் தனது மனைவியின் ராகத்துடன் ராகம் சேர்த்தார். அதன் பின் இருவரும் கட்Êக் கொண்டார்கள்.

நகரத்திற்கு வந்தபின் சவ்தரி விஷ்வம்பர்சகாயா சீவில் லைனில் ஒரு காட்டேஜ் வாடகைக்கு எடுத்தார். வீட்டை விட்டு வெளியே வரும்போது நிறையப் பணத்தை தன்னுடன் கொண்டு வந்திருந்தார். மேலும் அவரது அம்மா வீட்டு செலவுகளில் எப்படியாவது மிச்சம் பிடித்து இருநூறு அல்லது முன்னூறு ரூபாய்களை அனுப்பி வைத்து விடுவாள்.

"ஹாய், சுரேஷ், இன்று மாலைக்குள் எனக்கு முன்னூறு ரூபாய் வேண்டும் இன்று முழுவதும் நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் அற்ந்து திரிந்து கேட்டுவிட்டேன் எங்கும் ஏற்பாடு செய்ய முடியவில்லை. இறுதியில் படு தோல்வி அடைந்து உங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கும்படியாகி விட்டது.

நான் சிரித்துக் கொண்டேன்." என்னப்பா விஷயம் இவ்வளவுதானா. இதோ இப்ப வாங்கிக்கோ" சாயாவின் கோப்பையை சவ்தரி சாஹேப்பின் முன் நீட்டியபடி சோன்னேன். சற்று அமைதியாக இருந்து விட்டு நானே கேட்டேன் " என்னாச்சு?

"அப்படி பணத்துக்கு என்ன அவசரம் வந்து விட்டது" என்று கேட்டேன்.

"யப்பா, அதை மட்டும் கேட்காதே"

"என்னப்பா, எங்கிருந்தாவது எதாவது உத்தரவு வந்திருக்கா?" நான் சந்தேகத்துடன் கேட்டேன்.

"இல்லை, உத்தரவு என்று எதுவும் இல்லை என்று நான் உறுதியாக கூற முடியும்" திக்கித் திணறி சவ்தரி சாஹப் தெரிவித்தார்.

இதில் ஏதோ கள்ளத்தனம் இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்."சவ்தரி சாஹப் இப்படி மறைக்கிறதனால ஒñÏம் ஆகாது. பணம் என்னிடம் இருந்துதான் வாங்கÏம் என்று ஆகிப் போச்சு" சிரித்துக் கொண்டே கேட்டேன்.

"அதுவொன்றுமில்லை, நாளை காரின் 'இன்ஸ்டால்மென்ட்' கட்டணும். அவ்வளவுதான்" என்றேன் நான்.

"திடீரென்று உனக்கு என்ன ஆச்சு கார் வாங்கிக்கிட்ட, உனக்கு தினசரி செலவுகளை சமாளிக்கவே முடியவில்லை. இந்நிலையில் கார் எதற்கு?" உரிமையோடு கேட்டேன்.

"அன்னைக்கு நான் சரியாக மாட்டிக்கொண்டேன். இப்ப என்ன செய்ய?"

"என்றைக்கு?"

"இது வரைக்கும் யாரிடமும் சொல்லாத அந்த விஷயத்தை உன்னிடம் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. மூன்று மாதங்களுக்கு முந்தைய விஷயம். புவனின் அண்ணன் வந்திருந்தார். அவரை சந்திப்பதற்காக அவரது பங்களாவுக்கு சென்றிருந்தேன். பங்களாவை நெருங்கியதும் நான் குதிரை வண்டியை விட்டு விட்டேன். எனென்றால் அங்கு பலர் கூடியிருந்தார்கள் அதனால் விரைவில் திரும்ப முடியாது என்று தெரிந்து போயிற்று. எனது அபிப்ராயம் தவறாகப் போகவும் இல்லை. சாப்பிட்டு முடித்துக் கிளம்ப பனிரெண்டு மணிக்குத்தான் அவகாசம் கிடைத்தது."

"நான் ஒரு வேலையாக ஜங்சன் வரை போக வேண்டி இருந்தது. நான் புவனிடம் குதிரை வண்டியை அழைக்கக் கேட்டுக் கொண்டேன். வேலைக்காரனுக்கு உடம்பு சரியில்லை என்பது அப்புறம்தான் தெரிந்தது. சரி பங்களாவுக்கு வெளியே வந்து எதாவது சவாரி எடுத்துக் கொள்ளலாம் என்று புவனின் பங்களாவை விட்டுக் கிளம்பி நடந்தேன். யப்பா! சுரேஷ், வெயில் எவ்வளவு கடுமையாக இருக்குமுன்னு உனக்குத் தெரியும் தானே. நñபகல் நேரம் பூமி அனலாய் தகித்துக் கொண்டிருந்தது. மூளை உருகி வழிந்து கொண்டிருந்தது. கேட்டுக்கு வெளியே வந்து நான் ஒரு மரத்தின் நிழலில் நின்று கொண்டேன். சவாரிக்காக காத்துக் கொண்டிருந்தேன்.

"நான் சுமார் அரைமணி நேரம் அங்கு காத்துக் கொண்டு நின்றேன். காலியான ஒரு குதிரை வண்டியும் வரவில்லை. எனது பங்களா அங்கிருந்து சுமார் இரண்டு மைல்கள் தொலைவில் இருந்தது. நடந்து போகலாம் என்Ú எண்ணும் போதே கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. என்ன செய்வதென்றே புரியவில்லை. இறுதியாக இன்னும் பத்து நிமிடங்களுக்குள் எதேனும் வண்டி வரவில்லை என்றால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வீடு வரை பாதையை அளந்து விடுவது என்று முடிவு செய்து விட்டேன்.

பத்து நிமிடம் ஆகி விட்டிருந்தது. எந்த சவாரியும் வந்தபாடில்லை. நான் நடப்பதற்காக இடுப்பைக் கட்டினேன். முதல் அடி வைக்க காலைத் தூக்கிய மாத்திரத்தில் ஒரு காலியான இக்கா என்று அழைக்கப்படும் ஒற்றைக் குதிரை வண்டி வந்து கொண்டிருந்தது.

"நான் நின்று விட்டேன். உண்மையைச் சொல்கிறேன் சுரேஷ்! அந்த இக்காவை பார்த்ததும் தான் உயிருக்கும் உயிர் வந்தது. ஆனால் அந்த இக்காவைப் பற்றி நான் சில விஷயங்களை இங்கு சொல்லியே ஆக வேண்டிய அவசியத்தில் இருக்கிறேன். ஏனென்றால் இத்தனை பழைய மரத்தால் ஆன பொருளை நான் இதுவரைப் பார்த்ததே இல்லை. அதன் சக்கரங்கள் சின்னச் சின்னதாக இருந்தது. அதன் மேல் இருப்பு பட்டயம் ஏற்றப் பட்டிருந்தது. சக்கரச் சட்டதிலிருந்து விடுபட அந்த இரும்பு தகடு கடும் முயற்சி செய்து கொண்டிருந்தது. ஆனால் ஒவ்வொரு ஆணியும் அவற்றைத் தடுத்துக் கொண்டிருந்தது. இவ்வாறு அந்த ஆணிகளுடன் சண்டையிடும் நேரத்தில் அவ்வப்போது கரகரப்பான சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தது. இக்காவின் கூறை பற பற என அங்கும் இங்கும் பறந்து தனது வயோதிகத்தினைக் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. கூயில் மூன்று கம்புகள் இருந்தது. நாலாவது கம்பு வாய் பிழந்து விட்ட காரணத்தால் சாதாரண கம்பு பொறுத்தப் பட்டிருந்தது. மற்ற மூன்று கம்புகளிலும் முடிந்த வரை ஒட்டுப் போடப்பட்டிருந்தது. இக்காவில் ஒரு மெத்தை விரிக்கப் பட்டிருந்தது. மெத்தையின் மேல் துணி கிழிந்து போய் இருந்தது. உள்ளே இருந்த பஞ்சுகள் காற்றில் பறந்து உலகம் சுற்றித் திரிய எண்ணிக் கொண்டிருந்தது.

"அந்த இக்காவில் பொறுத்தப் பட்டிருந்த குதிரை சுமார் மூன்றரை அடி உயரமும், ஐந்து அடி நீளமும், ஒரு அடி உயரமும் கொண்டதாக இருந்தது. அதன் ஒவ்வொரு எÖம்பையும் எண்ணி விடலாம் போல் இருந்தது. இது பலமுறை ஓய்வாக நின்று விடவும் முயற்சி செய்தது. இக்காக்காரன் சுமார் எழுபது வயதைக் கடந்த கிழவன். அவனது தாடி மிகவும் நீளமாக இருந்தது. அது பருத்தியைப் போல் வெள்ளையாக இருந்தது. அவனது முதுகு வளைந்து பற்கள் காணாமல் போய் இருந்தது. அவரது ஒரு கையில் சாட்டையும் ஒரு கையில் குதிரையின் கயிறும் இருந்தது. அவர் இந்த நேரம் ஆபின் போதையில் இருந்தார் என்பது அவர்களை கண்களின் சுழற்சியைக் கண்டதுமே தெரிய வந்தது."

"சுரேஷ்! உடம்பு என்னவோ அந்த வண்டியில் உட்கார வேண்டாம் என்றுதான் சொல்லியது ஆனால் செத்துக் கொண்டிருந்த நான் வேறு என்ன செய்வேன். நகர்ந்து கொண்டிருந்த இக்காவில் ஏறிக் கொண்டேன். குதிரைக்கு இக்காவில் எடை அதிகமாகி விட்டது தெரிந்து போனது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அது நகராமல் நின்று கொண்டது. இக்கா நின்றதும் வண்டி அதிர்ந்தது. இந்த அதிர்ச்சியில் கிழவன் கண்களை திறந்து கொண்டான். ஒரே மூச்சில் குதிரையை அம்மா- ஆத்தா என்று அர்ச்சனித்து விட்டு ஐந்தாறு சாட்டையடிகளை வழங்கினார். குதிரை நடந்தே ஆக வேண்டிய நிலையில் இருந்தது. நடக்கவும் செய்தது. பின் இக்கா ஓட்டும் கிழவன் என்னைப் பார்த்தான் '' ஐயா வணக்கம்! எங்க போகÏம்?''

"நேரா போனாப் போதும்" என்றேன். காரணம் அதே பாதையில் தான் எனது பங்களா இருந்தது.

"கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு குதிரை வண்டி எனக்கு வலது பக்கமாக முன்னே நகர்ந்தது. அந்த குதிரை வண்டியில் இரண்டு பெண்கள் இருப்பதைக் கண்டேன். அவர்கள் இருவரையும் உனக்கும் தெரியும். பிரபா மற்றும் கமலா. அவர்கள் இருவரும் நான் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது என்னுடன் படித்தவர்கள். சமீபமாக இவர்களுடன் எனது நட்பு ஆழமாகிக் கொண்டிருந்தது. சுரேஷ்! என்ன சொல்வேன். அவர்கள் இருவரையும் கண்டதும் எனது முகம் வெளுத்து விட்டது. இதயத்தில் இடி விழுந்தமாதிரி ஆகி விட்டது. அவர்கள் என்னை இப்பயொரு இக்காவில் சவாரி செய்வதைப் பார்த்து விட்டால்?..... அதனால் நான் எனது முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டேன்.

"என்னுடைய துரதிஷ்டம் நான் மட்டுமே அந்த இக்காவில் இருந்தேன். அதில் இன்னும் சவாரிகள் இருந்திருந்தால் நான் என்னை மறைத்துக் கொண்டிருப்பேன். குதிரை வண்டி வேகமாக கடந்து போய்க் கொண்டிருந்தது. திடீரென அதன் வேகம் குறைந்து விட்டது. நான் அப்பொழுது பின்னால் பார்ப்பது போல் இருந்தேன். குதிரை வண்டி எவ்வளவுதான் மெதுவாகச் சென்றாலும் எனது இக்காவை பிடிக்க முடியாது. இதனை நினைத்து நான் சந்தோஷமாக மூச்சு விட்டேன். திடீரென அவர்களின் குதிரை வண்டி நின்று விட்டது. பிரபா மற்றும் கமலா இருவரும் சத்தமாக கலகலவென சிரித்து விட்டார்கள்."

"சுரேஷ், அந்த நேரம் எனது நிலை எப்படி இருந்தது என்று உன்னால் புரிந்து கொள்ள முடியாது.! வெட்கத்தால் எனது முகம் வண்ண வண்ணமாக மாறிக் கொண்டிருந்தது. மனதில் பல விதவிதமான எண்ணங்கள் வந்து கொண்டிருந்தது. இந்த இக்கா ஓட்டுபவனை கொன்று விடலாம் போல் வெறி வந்தது. சில சமயம் எனது உயிரையே விட்டு விடலாம் போல் இருந்தது. மேலும் அவர்கள் இருவரின் கழுத்தையும் நெரித்துக் கொன்று விடலாம் போல் இருந்தது. கடைசி வரை நான் எனது முகத்தை முன்னுக்குத் திருப்பவில்லை. திருப்பவே இல்லை. இக்காவை நிறுத்தும்படி கிழவனிடம் சொன்னேன். ஆனால் வெகு நேரம்வரை எதிரில் நின்ற குதிரை வண்டி நகரவே இல்லை. வேறு வழியில்லாமல் "இக்காவை திருப்புப்பா" என்று இக்காவை நான் வந்த திசைக்கே திருப்பும் படி கேட்டுக் கொண்டேன். அதன்படி கிளம்பிய இடத்திற்கே திரும்பி வந்து சேர்ந்தேன்.

"இவ்வளவு அவமானத்தை நான் வாழ்வில் என்றுமே அனுபவித்தது கிடையாது. நான் இவர்கள் இருவருக்கும் நான் யார் என்று காட்டுவேன். என்னிடம் கார் உள்ளது என்று காட்டப் போகிறேன். இப்படியாக எனது மரியாதைக்கு எற்பட்டுள்ள கரையை கழுவிக் கொள்ளப் போகிறேன். அன்று மாலையே நான் இந்தக் காரை வாங்கி விட்டேன். கையில் பணம் இல்லாத காரணத்தால் 'இýஸ்டால்மெண்ட் சிஸ்டத்தில்' வாங்கிக் கொண்டேன். இப்படியாகத்தான் இந்த வண்டியை வாங்கிக் கொண்டேன்.

நான் சிரித்துக் கொண்டேன் "சரி! சரி! இப்படித்தான் கார் வாங்கினாயா. சரி விடு. கார் வந்திட்டுள்ள அது போதும்"

சவ்தரி விஷ்வம்பர்சகாயா இன்னொரு சாயாவை கோப்பையில் தயார் செய்தபடி "யப்பா சுரேஷ்! இந்தக் காரை நான் வைத்துக் கொள்ள முடியாது. எனக்கு என் செலவுகளை பார்க்கவே கஷ்டமாக உள்ளது இதில் இந்தக் கார் வேற என்னைத் துரத்துகிறது. ஆனால் என்ன செய்ய என் நிலைமை அப்படியாக இருந்தது. என்னைக்கு கார் வாங்கினேனோ அன்றிலிருந்து இன்று வரை பிரபா மற்றும் கமலா இருவரையும் பார்க்கவேயில்லை. கடந்த இரண்டு மாதமாக இரவு பகல் என்று காரில் சுற்றிக் கொண்டிருக்கிறேன். நகரத்தின் அத்தனை சாலையையும் சல்லடை போட்டு தேடி விட்டேன். அவர்கள் வீட்டருகில் எண்ணிக்கையில்லா முறை சுற்றி விட்டேன். அவர்கள் என்னை காரில் செல்வதைப் பார்த்தால் போதும் என்று இருந்தேன். ஆனால் தெரியவில்லை அவர்கள் எங்கே சென்று விட்டார்களோ? அவர்களைப் பற்றி தகவலே இல்லை. இந்தக் காரை அவர்கள் பார்த்து விட்டால் போதும் என்னிடம் கார் இருப்பது அவர்களுக்கு தெரிந்து விட்டால் போதும் நான் இந்தக் காரை விற்று விடுவேன். நான் இந்தக் காரால் தொல்லையடைந்து விட்டேன். சரிப்பா! 'இன்ஸ்டால்மென்ட்' கட்டணும் பணத்தை எடு"

ஜூலை 11, 2006

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com