தமிழும் சித்தர்களும்-31

சித்தர்களின் மரபியல் குரு, சிஷ்ய பாரம்பரியத்தின் மீது கட்டமைக்கப்பட்டது. இங்கே குருவே எல்லாவற்றுக்கும் மேலானவராகவும், இறைநிலைக்கு இணையான வராகவும் வைத்துப் போற்றுப்படுகின்றார். ஒவ்வொரு சீடரும், தன் குருவினை தியானிக்கவும், வணங்கிடவும் தனித்துவமான சூட்சும மூல மந்திரங்களை பயன்படுத்தினர். மகிமை வாய்ந்த சித்தர்களின் மூல மந்திரம் காணுங்கள். 

நந்தீசர் மூல மந்திரம்

     ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி 

அகத்தியர் மூல மந்திரம்    

     ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி

இதுபோல் ஒவ்வொரு சித்தருக்கும் ஓர் மந்திரம் உண்டு. வாசகர்களே, உங்களுக்கு எந்த சித்தர் மந்திரம் தேவையோ, அது உங்களை ஒரு நாள் தேடி வரும். ஒரு மண்டலம் 48 நாட்கள் எவ்வாறு உருவானது, அதுபோல் ஒவ்வொரு கிரகங்களுக்கும் என்ன மந்திரம் என்பதையும் காண்போம். திருமூலருக்கான மந்திரத்தை மட்டும் இப்போது கொடுக்கிறேன். 

ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீமூலநாத சித்த சுவாமியே போற்றி 

விசாகம், ஆயில்யம், அவிட்டம் நட்சத்திரகாரர்கள், ஒரு மண்டலம் காலைவேளையில் 108 முறை உச்சரித்து வாருங்கள் பார்ப்போம். ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள் வானமண்டலத்தை 12 ராசிக்களாக்கியதும், அதில் 27 நட்சத்திர தொகுப்புகளை வகுத்ததும், அதிலுள்ள 9 கிரக வலிமைகளை கூறியதில் உள்ள சித்தர் அறிவியல் கூட்டு தொகையாக 48 என்ற எண், ஒரு மண்டல நாட்களானது. இப்பொழுது ஒவ்வொரு கிரகங்களின் மந்திர நிலையை காண்போம். ஒவ்வொரு ராசிக்கும் மந்திரம் உண்டு, ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் மந்திரம் உண்டு. ஆனால் அவ்வளவு மந்திரங்களும், இத்தொடரில் தரமுடியாத காரணமும், உதாரணத்திற்கு ஒரு சில மந்திரங்களை கொடுத்ததும், உங்களுக்கு இந்த மந்திரம் தெரிய வேண்டுமென்று இறைவன் அனுமதி அளித்தால், கட்டாயம் ஓர் நாள் உங்கள் லக்கின, ராசிக்கு உகந்த மந்திரங்களை அறிவீர்கள். மேலும் இத்தொடரை ஓரிரு வாரங்களில் முடிக்கலாம் என்ற நிலையில் 48 மந்திரங்களையும் இங்கே இடம் பெற வைக்க முடியவில்லை. 

சூரியன் : ஓம் ஹ்ரம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஷக் சூர்யாய நமக

          (மூல மந்திரம்) 

          ஓம் அம் நமசிவாய சூர்ய தேவாய நம  

          (சூரியனுக்குரிய மற்றொரு மந்திரம்)

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் இந்த மந்திரத்தை உச்சரித்து வருவது நல்லது. சூரியனார் கோவிலில், உங்கள் ஜென்ம நட்சத்திரமன்று, இரண்டரை மணி நேரம் உள்ளே இருத்தல் நலம். சூரியனின் அதிதேவதையான சிவபெருமானை தினமும் வணங்க வேண்டும். ஓம் நமசிவாய என்பதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கூற வேண்டும். தொடரை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்கு வந்து விட்டதால், சிவனில் ஆரம்பித்த இந்த தொடர், சிவனின் வரலாற்றை அறிதலோடு முடிக்க வேண்டும். நமது இருப்புக்கும் இறப்புக்கும் இடையில் சிவனின் வாழ்ந்த காலங்கள், அவர் கொடுத்த வேத முறைகள் எல்லாம் தமிழிலிருந்து, சமஸ்கிருதத்திற்கு இடம் பெயர்ந்து விட்டது. நான் மேலே கூறிய மந்திரங்களும் சமஸ்கிருத தழுவலே. மனிதராய் பிறந்து சித்த அரசர்களாக பல்வேறு காலகட்டங்களில் மக்களை வழிநடத்தி ஜம்புலன்களையும் அடக்கி, நிர்வான நிலையை அடைந்தவர்களே ஆசிவக கடவுளாவர். கால வரிசைப்படி அத்தகைய கடவுளரானவர்கள் யார்? 20000 ஆண்டுகளுக்கு முன்பு குமரிக்கண்டத்தில் வாழ்ந்த சிவன், 10000 ஆண்டுகளுக்கு முன்பு குமரிகண்ட நீருழி காலத்தில் வாழ்ந்த முருகன், 7000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராவணனனும், இந்திரனும், 5100 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மகாபாரத நாயகரான கிருஷ்ணனும், 4000 ஆண்டுகளுக்கு முன்பு அகில இந்தியாவையும் ஆண்ட விண்ணாய்வு சித்தரான திருமாலும் ஆவர். சிவனின் மனைவியாக உருவகப்படுத்தப்பட்ட பார்வதிதேவி, சந்திரனின் பிரத்யதி தேவதையாக சோதிடம் கூறுகிறது.  

கடகலக்னத்தில் பிறந்தவர்கள் சந்திரனின் அருளை பெற்றே தீரவேண்டும்.   

     ஓம் உம் நிலை சந்த்ர தேவாய நம

இந்த மந்திரத்தை கடகலக்னத்தில் பிறந்தவர்கள் உச்சரித்து வருவது நலம். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் திங்க@ரில் உள்ள சந்திரன் கோவிலில் ஜென்ம நட்சத்திரமன்று, இரண்டரை மணிநேரம் கோவிலுக்குள் இருந்தால் சந்திர வலுவை கூட்டலாம். சென்னையில் இருப்பவர்கள் குன்றத்தூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் உள்ள சோமங்கலம் என்ற ஊரில் அருள்பாலிக்கும் சோமநாதீஸ்வரர் சென்று வழிபடலாம். திங்கள்கிழமை தோறும் செல்வதும் சிறப்பு, சிவனின் மகனாக உருவகப்படுத்தப்பட்ட முருகனுக்கும் வாழ்ந்த கால இடைவெளி மட்டும் சுமார் பத்தாயிரம் ஆண்டுகள். அதனாலேயே சிவன் புலித்தோல் அணிந்து வலம் வருதலும், அவர் வேட்டையாடிய மலை குறவர் சமூகத்தவர் என்பதும் புலனாகிறது. முருகனுடைய ஆடை அலங்காரங்கள் ஞானபழக் கதையால் ஆண்டியாகி விட்டது. செவ்வாய் கிரகத்தின் அதி தேவதையாக சுப்ரமணியர் உள்ளார். செவ்வாய் சிவந்தநிறம் கொண்டவர் என்பதால் சிகப்பு நிறத்திற்கு இவரே அதிபதி ஆகிறார். மேச லக்னத்தில் பிறந்தவர்களும், விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களும், செவ்வாயின் அதிதேவதையான முருகனை வணங்குதலும், செவ்வாயின் மந்திரத்தை கூறுதலும் நலம்.   

     ஓம் சம் சிவய அங்காரக தேவாய நம

செவ்வாய்க்குரிய தலமாக பழனியும், வைத்தீஸ்வரன் கோவிலும் உள்ளது. ஈஸ்வரன் என்று அழைக்கப்படும் சிவன், முருகனின் தமிழ் சங்க காலத்திற்கு முன்பே, முதல் தமிழ் சங்கத்தை நிறுவியவர். அவரே பட எழுத்து முறைகளை நிறுவியவர். இன்று சீன எழுத்து முறை அவ்வகையில் ஒன்று தான். அவரே காலம் என்ற அக உணர்வை ஏற்படுத்தி காலத்தை அளவிடும்  அளவைகளையும் உருவாக்கியதால் அவர் கால பைரவர் என்று அழைக்கப்படுகிறார். நாம் வாழும் இப்பேரண்டம் பெருவெடிப்பில் உருவாகியது என்றும், விண்கோள்கள் ஒரு ஒழுங்கில் சுற்றி வருகின்றன என்ற விஞ்ஞான உண்மையையம் வடிவமைத்தார். இந்த வரலாறறை வருங்காலத்தில் கடத்தவே சிவன் நடராசராக உருவகப்படுத்தப்பட்டார் இடது காலை தூக்கி நடராசராக வலம் வரும் வரலாறு, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வலது காலை மாற்றி நிற்பது யோசிக்க வைக்கிறது. யோசிக்க வைக்கும் அறிவு கிரகம் புதன், மீனாட்சியம்மனை புதன்கிழமை தோறும், மிதுனம், கன்னி லக்கினத்தில் பிறந்தவர்கள் வழிப்படுதல் மிகச்சிறப்பு. புதனுக்குரிய மந்திரத்தை உச்சரித்தல், வெகுசிறப்பு, 

     ஓம் மம் ஹ்ரி உம் சிவ புத தேவாய நம

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com