பயணிகள் கவனிக்கவும்

இன்னொருவனின் கனவு-26

உலகம் என்பது ஒரு புத்தகம்.
பயணம் செய்யாதவர்கள்
அதன் ஒரு பக்கத்தை மட்டுமே
இன்னமும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்
- St. Augustine.

பயணம் நம் குழந்தைப் பிராயத்தின் முதல் கனவு.

முதிர்ந்து உதிரும் வரை தொடரும் கனவு.

பயணங்கள் நம்மை கட்டமைக்கின்றன.கட்டவிழ்க்கின்றன.

பயணங்களை பல நேரங்களில் நாம் நிகழ்த்துகிறோம்,

பல நேரங்களில் பயணம் நம்மை நிகழ்த் துகிறது.

சுற்றுலா என்பது பயணத்தின் மிக எளிய வடிவம்.நம் வீட்டிலிருந்து குடும்பமாக நாம் வெளியே கிளம்புவதே நாம் என்றும் விரும்பும் 'விட்டு விடுதலை' ஆகி அனுபவம்.ஆனால் கோடை விடுமுறையில் குழந்தைகளை க் கூட்டிக் கொண்டு,கட்டு சோறு கட்டிக் கொண்டு,கிளம்புவதே எவ்வளவு பெரிய இம்சை அனுபவம் என்பதை அந்தக் கால ஆனந்த விகடன் கார்ட்டூன்கள் இன்றும் நகைச்சுவை இழையோடு சொல்லி நிற்கின்றன நம் மனதில்.தமிழ் நாட்டில் சுற்றுலா என்பது பெரும்பாலும் நீர் சார்ந்தது.

அருகில் இருக்கும் ஒரு அணைக்கட்டு,நீர் வீழ்ச்சி,ஆறு,கடல் என்பதாகவே அது அமைந்திருக்கிறது. குற்றாலமும்,பாபநாசம்,வைகை அணைக் கட்டுகளும்,திரு மூர்த்தி மலை, திற்பரப்பு அருவிகளும், நாம் தலை முறை தலை முறையாக நீராடிய உற்சாகங்கள்.குற்றாலத்தின் சாரல் உலகின் எந்த மூலைக்குப் போய் வந்தவர்களும் மறுபடி மறுபடி நனைய விரும்பும் வாழ் அனுபவம். காடும் மலையும் பிரிட்டிஷ் காரர்களால் அதிகம் விரும்பப் பட்டு,கண்டெடுக்கப் பட்டு,சாலை இடப் பட்டு பெயர் வைக்கப் பட்ட நம் தமிழக உற்சாகங்கள்.

உதக மண்டலமும், கொடைக் கானலும்,ஏற்காடும்,ஏலகிரியும் நம் குளிர் பனி கோடை வாச ஸ்தலங்கள். கொஞ்சம் தூரம் போனால் அரண்மனைகள் மைசூரிலும்,ராஜஸ்தானிலும்,ஆக்ராவில் தாஜ் மகாலும், டெல்லியில் செங்கோட்டையும்,நம் குழந்தைகளை எப்போதும் உற்சாகத்தில் ஆழ்த்துபவை. காஷ்மீரும்,இமயமலையும் நம் உலக சுற்றுலா அடையாளங்கள்.



பயணத்தின் பொது விதி அதன் மீட்டெடுப்பு அனுபவம் தான். சித்தரையும், புத்தரையும் மீட்டு எடுத்தது பயணங்கள் தான்.பயணம் நம் ஆன்மீக நம்பிக்கைகளில்,நம் மத அடையாளங்களில், தவிர்க்க முடியாத புனிதம் ஆக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.காசியும்,கைலாசமும்,நவ திருப்பதியும், மெக்கா, மதினாவும், ஜெருசலமும், புனிதபயணங்கள். ஞானப் பயணங்கள்,சில நேரங்களில் நம் வாழ்வின் இறுதிப் பயணங்கள்.

இப்போதெல்லாம் பயணங்கள் பேக்கேஜ் டூர்கள் ஆகி விட்டன.அதனாலேயே சாகச பயணம் பிரபலம் ஆகிக் கொண்டிருக்கிறது.

சினிமா சில அதி அற்புத பயணங்களைத் தன் பங்குக்கு பதிவு செய்திருக்கிறது.

உற்சாக, அதே நேரத்தில், யோசிக்க வைக்கும் பயணம் ,நாம் காண இருப்பது.

நாம் மறந்த, நம் ஆதி வாழ்க்கையின், எளிமையான ஞாபங்கள்.அதன் விலா நோகும் சிரிப்புச் சிதறல்கள், பரவசம் ஊட்டும் காடும்,மிருகங்களும்,அதன் சாகச வெளிகளும்.

கல ஹாரி.(Kalahari.).தென்னாபிரிக்கா வில் போஸ்ட்வானா வுக்கு அருகில் இருக்கும் நீராதாரம் குறைந்த காடு,கொஞ்சம் பாலை வனம் என்றும் சொல்லலாம்.

ஒரு காலி கோகோகோலா பாட்டிலின் கல ஹாரி பயணம் தான் நம் முதல் சினிமா டூர்.

வெட்ட வெளியில் நம் மனதைத் தொலைக்க இருக்கும் பயணம்.

திங்கள்,செவ்வாய்,புதன் என வார நாட்களும்,சனி,ஞாயிறு என வார இறுதி கேளிக்கை,ஓய்வு நாட்களும் இல்லாத பூமி கல ஹாரி.ஏழரை மணி,பத்து மணி,அட்டெண்டன்ஸ்,பதினோரு மணி டீ ப்ரேக், ஒரு மணி லஞ்ச்,மூன்று மணி டீ,ஐந்து மணி பேக் அப் எதுவும் இல்லாத பூமி.ஆதி வாசி பூமி.

gods must be crazy(1980).

Johannes Jacobus Uys அல்லது Jamie Uys(ஜெமி உய்ஸ்)இயக்கிய படம்.

ஒரு ஆவணப் படத்திற்கான எளிமையான வாய்ஸ் ஓவர் உடன் விரிகிறது நம் முன் கல ஹாரி.

பார்வைக்கு ஒரு வன சொர்க்கம் மாதிரி இருக்கும் கலஹாரி,உண்மையில் உலகின் மிக வறண்ட பாலை வனங்களில் ஒன்று.அதன் பெரு மழைக் காலத்தில்,அங்கே நீர் பூத்திருக்கும் எங்கும்,நதிகள் கூட உருவாவது உண்டு.நீர் யானைகளும்,காண்டா மிருகங்களும்,காட்டுப் பன்றிக் கூட்டமும் தங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்ளும் அபூர்வ மழை நாட்கள் அவை.மழை நின்ற கொஞ்ச நாட்களில் கல ஹாரியின் அசுர மண் கொஞ்சம் கொஞ்சமாக நீர் பூப்புகளை த் தனக்குள் இழுத்து சூடிக் கொள்ள ஆரம்பிக்கும்.நீர் என்பது தேங்கி நிற்க வாய்ப்பில்லாத பூமி கலஹாரி.அதன் திடீர் நதிகள் வறண்டு வெறும் கானல் நீராய் எஞ்சி இருக்கும்.விலங்குகள் விலகிப் போகும்.புற்கள் மேய உதடுகள் இன்றி தனித்து அனல் காற்றாய் ஆடும்.மற்றவர்கள் யாராய் இருந்தாலும்,சில வாரங்களில் நா வறண்டு இல்லாமல் போகும் அந்த பூமியில் வாழப் பழகியவர்கள்,வாழத் தெரிந்தவர்கள்,சதையற்ற உடலும்,பூரித்த சந்தோஷ மனமும் கொண்ட புஷ்மென்(bushmen)எனப் படும் பழங்குடி மக்கள். புஷ்மென் என்பது அவ்வளவு நாகரீகம் இல்லாத விளித்தல் என்று அவர்கள் கருதுவதால்,அவர்கள் சான் (san) மக்கள் என்று அழைக்கப் படுகிறார்கள்.போஸ்ட் வானா வில், நமீபியாவில்,ஜிம்பாப்வேயில்,அதிகார பூர்வமாக சான் மக்கள் என்றே அவர்கள் அழைக்கப் படுகிறார்கள்.ஸ்பென்சர் வெல்ஸ், நேஷனல் ஜியாக்ரபி யுடன் இணைந்து நடத்திய மரபணு ஆராய்ச்சி ஒன்றில் (Spencer Wells' 2003 book The Journey of Man) சான் பழங்குடியினர் உலகின் ஆதி மக்களில் ஒருவர்கள்,கிட்டத் தட்ட 70,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு இனம் என்று சொல்கிறார்.

கலஹாரியின் சான் மக்களுக்கு நீர் அற்றுப் போன காலத்தில் நீர் சேகரிப்பதும்,நீர் ஆதாரங்களைக் கண்டு பிடிப்பதும் தெரியும்.காலைப் பனியின் ஈரம் படர்ந்திருக்கும் இலைகளில் ஆரம்பித்து, மண்ணுக்குள் புதைந்திருக்கும் கிழங்குகள் வரைக்கும் நீரைத் தேடித் பிடிக்க அவர்களின் குழந்தைகளுக்கும் தெரிந்திருந்தது.அவர்களின் குழந்தைகள் விளையாடுவது தவிர வேறு ஒரு கடின விசயமும் செய்ய அனுமதிக்கப் படவில்லை.சான் மக்கள் குழந்தைகளை ஒரு போதும் அடிப்பதில்லை. பெண்கள் அங்கே மதிக்கப் பட்டார்கள்,முடிவுகள் எடுப்பவர்களாக, குடும்ப விசயங்களைத் தீர்மானிப் பவர்களாக இருந்தார்கள்.கலஹாரி வாசிகள் முக்கியமாக கெட்டது என்ற ஒன்றை அறியாமலும்,அதனால் நல்லது என்பதைப் பிரிக்காமலும் இருந்தார்கள். அந்த பூமியில் இருக்கிற அனைத்தும் நல்லவை தான்.மிக விஷமுள்ள பாம்புகள் கூட.அவற்றை அவர்கள் துன்புறுத்துவதில்லை,அதே நேரம்,விஷம் நீக்கிய பின் அவை மிக நல்ல உணவாகவும்,அவற்றின் தோல் அவர்களுக்கான அருமையான சுருக்குப் பை களாகவும் அமையும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.அக் கூட்டத்தில் தான் நமது கதாநாயகன் ஸி (xi ) யும் இருந்தான்.சந்தோஷமாக இருந்தான்.

அவர்கள் கடவுளைக் கண்டதில்லை எனினும்,கடவுள் இருப்பதாக நம்பினார்கள்.மழையில்லாத காலங்களில் கூட திடீர் என அவரின் சத்தத்தை அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.அதிகம் உண்டு செரிமானம் ஆகாமல் கடமுடா என்று இரையும் அவரின் வயிற்றுச் சத்தம் என்பதாக அவர்கள் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொள்வதுண்டு.அவர்களது பேச்சு மொழி பெரும்பாலும் கிளிக் கிளிக் சப்தங்களுடன் அமைந்தது.சில சமயங்களில் கடவுளின் வயிற்றுப் பிரச்சனை அதிகமாகி அவர் கேஸ் விடுவதை க் கூட அவர்கள் பார்த்ததுண்டு,தங்களுக்குள் நகைத்துக் கொண்டதுண்டு.



தாழப் பறக்கும் விமானங்களும்,அவை எழுப்பும் சத்தமும்,அவை பின் விட்டுச் செல்லும் புகையும் தான் அவர்கள் நிஜமாகப் பார்த்தது.எனினும்,அவர்கள் விமானம் என்று ஒன்றை அறியாமல் சந்தோசமாகத் தான் இருந்தார்கள்.அந்த விமானம் ஒன்றில் இருந்து எறியப் படும் காலி கோகோ கோலா பாட்டில் அவர்களின் மண்ணில் வந்து சேப் லேண்டிங் ஆவதில் இருந்து அவர்களின் இம்சைக் காலம் ஆரம்பிக்கிறது.

அங்கிருந்து,600 கிலோ மீட்டர் தொலைவில் உலகம் வேறு மாதிரி இருந்தது.கான்க்ரீட் பூமி, கான்க்ரீட் மனிதர்கள்.சூழலுக்கு அவர்கள் ஒத்துப் போக முடிய வில்லை என்பதால் தங்களுக்கு ஏற்ற சூழலை அமைத்துக் கொண்ட அறிவு ஜீவிகள்.எனினும்,அவர்கள் அறிவு அதிகம் ஆக ஆக அவர்களின் துன்பமும் அதிகம் ஆனது.அவர்களின் குழந்தைகள் உட்பட அனைவரும் ஒரு நாள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள மிகவும் படிக்க,யோசிக்க,உழைக்க தலைப் பட்டார்கள். அங்கே நமது ஹீரோயின் கேட் (Kate Thompson ) ஒரு பத்திரிகை நிருபராக பணி புரிகிறாள்.அவளுக்கு கலஹாரி பகுதியின் மேல் ஆர்வம் வருகிறது,அவர்களைப் பற்றிய சில தகவல்களை அறிந்தவுடன்.அந்தப் பகுதியில் இருக்கும் இருக்கும் கிராமம் ஒன்றிற்கு டீச்சர் ஆக பணி புரிய கிளம்புகிறாள்.

அவளை வரவேற்க சென்று கொண்டிருக்கும் ஆண்ட்ரு ஸ்டெய்ன் விலங்குகளை ஆராயும், பயாலஜிஸ்ட். கலஹாரியில் தன் சொல் பேச்சு கேளாத ,கந்தலான லேன்ட் ரோவர் ஜீப்புடன் அலைந்து கொண்டிருப்பவன்.அவன்,அவனது,ஜீப்,டீச்சர் கேட் இடம் பெறும் காட்சிகளும், அனுபவங்களும் நம் வயிற்றைச் சிரிப்பால் பதம் பார்க்கப் போகிறவை.

இன்னொரு பக்கம் கொரில்லா போராளிக் குழு,அதை விரட்டும் பரணி எனப்படும் அருகில் இருக்கும் அரசாங்கத்தின் ராணுவ வீரர்கள்,அவர்களிடம் இம்சைப் படும் மலையக ஆதி வாசி மக்கள் இப்படி மூன்று பிளாட் கள் கொண்டது காட்ஸ் மஸ்ட் பி க்ரேஸி.எனினும் அதன் மிக்ஸிங் அதி அற்புத ஆப்ரிக்கன் சபாரி அனுபவத்தை அளிக்கக் கூடியது.அது வெளியான போது,அமெரிக்க தியேட்டர்களில் தொடர்ந்து மூன்று வருடங்கள் இடை விடாது திரையிடப் பட்ட சாதனை வரலாறு கொண்டது gods must be crazy!

ஆவணப் படம்,சாகசம்(adventure),சமூகக் கிண்டல் (social satire),என மூன்று விதமான ட்ரீட்மெண்ட் கொண்டது காட்ஸ் மஸ்ட் பி க்ரேஸி.

காரணம் அதன் இயக்குநர் ஜெமி உய்ஸ்.

போக்ஸ்பர்க் (Boksburg) எனப் படும் தென்னாப்பிரிக்க தங்க சுரங்கத்தில் பிறந்தவர் ஜெமி.அவரது சில ஆவணப் படங்கள் அக்மார்க் அசல் தங்கம்.ஆசிரியர் ஆக வாழ்க்கையை ஆரம்பித்து,உள்ளூர் மாஜிஸ்திரேட் ஆகி,சினிமா இயக்குனர் ஆனவர் ஜெமி உய்ஸ்.வனமும் வனம் சார்ந்த வாழ்க்கையும் அவருடையது. ஒரு தீர்ப்பு சொல்ல வனத்தையும்,அதன் வனப்பு மிக்க சுழல் ஆறுகளையும் கடக்க வேண்டிய அன்றாட வாழ்க்கை அவருடையது.வாழ்வும்,கனவும் சேர்ந்த போது அவர் உலகம் ரசித்த,விரும்பிய சினிமா இயக்குனர் ஆகவும்,போற்றத் தக்க ஆவணப் படங்களின் படைப்பாளி ஆகவும் ஆனார்.அவரின் பலம் அவரின் வாழ்பனுபவம்.

"Beautiful People" அவரின் கொண்டாடப்பட்ட,விருது வாங்கிய ஆவணப் படம். யானைகளும், குரங்குகளும், காட்டுப்பன்றிகளும்தான் அந்த அழகிய மனிதர்கள். ஜெமி உய்ஸ் சுவர்களை வெறுத்த மனம் மற்றும் வாழ்க்கை ஒன்றிற்கு சொந்தக் காரர்.அவருடைய மனதுக்கு விருப்பமான கடற்கரை வீடு, ஒன்றில், கடலில் இருந்து வெறும் 300 மீட்டர் தொலைவில் தன் முக்கால் வாசி வாழ்க்கையை கழித்தார். வருடத்தின் முக்கால் வாசி நாட்கள் மின்சாரம் இல்லாத பகுதி அது. இருளும்,மெழுகு வர்த்தி வெளிச்சமும் அவரின் வெட்ட வெளி கனவுகளை ச் செதுக்கின.Lost in the Desert,Funny People,After You, Comrade ,The Gods Must Be Crazy (1980),The Gods Must Be Crazy II ஆகிய அவரின் கனவுகள் நாம் தரிசிக்க வேண்டியவை.

வனம் சார்ந்த மக்களும்,விலங்குகளும் குறித்த,சுவாரஸ்ய மான தகவல்கள் காட்ஸ் மஸ்ட் பி க்ரேஸி யில் நமக்கு ஒரு புன்னகையை அல்லது விலா நோகும் சிரிப்பை ஏற்படுத்தி சென்றவாறே இருக்கும்.யோசிக்கவும் வைக்கும்.

சான் ஆதி வாசிகள் தங்கள் உணவை வேட்டையாடுவதற்கு மயக்க மருந்து தடவப் பட்ட கூர் அம்புகளைப் பயன் படுத்தினார்கள்.xi ஒரு மானை வேட்டையாடும் காட்சியில்,முதலில் அதன் மேல் அம்பை எய்து விட்டு,அது மயக்கமுறும் வரைக்கும்,காத்திருந்து, பின் அதன் அருகில் மண்டியிட்டு,தன் குடும்பத்தின் உணவு காரணமாக அதைக் கொல்ல நேர்ந்ததற்கு மன்னிப்பு கேட்பான். ஆதிவாசிகள் ஒரு போதும் வேட்டையாடுவதை விளையாட்டு ஆக மேற்கொள்பவர்கள் இல்லை என்பதை அக் காட்சி உணர்த்தும்.அதே பழக்கத்தில் ஸி நகர் புறம் ஒன்றில் பண்ணை ஆடு ஒன்றை உணவிற்காக அம்பெய்யும் போது,சிறை பிடிக்கப் படுவான், திருட்டு குற்றம் சாட்டப்பட்டு.வன விலங்குகளை கேள்வி கேட்பவர் இன்றி,பொழுது போக்குக் காக வேட்டை ஆடும் சமூகத்தால்.

உயிரியல் ஆய்வாளர் ஸ்டெயின் ப்ளஸ் டீச்சர் கேட் இருவருக்குமான மெல்லிய ரொமான்ஸ் ப்ளஸ் வன அனுபவங்கள் காட்ஸ் மஸ்ட் பி க்ரேஸி யின் காமெடி ஹை லைட்.அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு முப்பது கிமீ முன்பாகவே,கலஹாரியின் வனப் பகுதிக்குள் ஒரு இரவை அவர்கள் கழிக்க வேண்டியிருக்கிறது.தீ மூட்டி அவர்கள் சமைத்தும்,குளிர் காய்ந்தும் கொண்டிருக்கும் போது,புழுதியைக் கிளப்பிக் கொண்டு அந்த ஜந்து ஓடி வருகிறது.அடித்துப் பிடித்து அலறி அவர்கள் இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் எஸ்கேப் ஆகிறார்கள்.வேக வேக மாக ஓடி வந்த ஜந்து கடமையே கண்ணாயிரம் ஆக அந்த நெருப்பு முழுதையும் கால்களால் தேய்த்து அணைத்து விட்டு ஓடி விடுகிறது.நம்ம காண்டா மிருகம் Rhinoceros தான் அது.கானகத்தின் தீயணைப்பு அதிகாரி,படை,எல்லாம் அவர் தான்.மிஸ்டர் காண்டாமிருகம்,ஸ்டெயின் வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால்,the self-appointed fire-prevention officer of the forest!



நவநாகரீகஉலகின் 'கருத்துக்கட்டமைப்புகளுக்கும்',ஆதிமனிதர்களின்அதைப்பற்றியபுரிதலில்இருக்கும்வேறுபாடுகளும்கூடநகைச்சுவையுடன்சொல்லப்பட்டிருக்கும்.தன்பயணத்தின்வழியில்துப்பாக்கிவைத்திருக்கும்போராளிஒருவனைச்சந்திப்பான்ஸி.அந்தத்துப்பாக்கியைஅவன்மரக்குச்சிஎன்றுஎண்ணிகையில்எடுத்துப்பார்க்க,அந்தபோராளியோபயந்துஓடுவான். வேறுஏதோதுரத்துகிறதுஎன்றுநினைத்துஸியும்அவன்பின்னாலேயேஓடுவான்.

அடுத்துஅவன்டீச்சர்கேட்ஐசந்திக்கும்போது,அவளின்வாளிப்பான,வெளிறிய,உடல்மற்றும்பளபளவெண்தலைமுடியையும்பார்த்து,உலகின்மிகஅவலட்சணமானபெண்ஒருவளைப்பார்த்தமாதிரிநினைப்பான்.இவ்வளவுபெரியபெண்உண்ணவேண்டுமென்றால்,நாள்பூராகிழங்குதோண்டிக்கொண்டேதான்இருக்கமுடியும்,தவிரஇவ்வளவுவெயிலில்அவள்அணிந்திருக்கும்ஆடைகள்விசித்திரமானவைஆகவும்,அவள்செயல்கள்மந்திரவாதியுடையதுபோலவும்இருக்கின்றன.அவன்அவளைதான்பார்த்த'விசித்திரகடவுள்' லிஸ்டில்சேர்த்துக்கொள்வான். நமதுநாகரீகசமூகத்தில்கேட்டீச்சர்ஒருஅழகிஎனஎளிதாகக்கருதப்படக்கூடியவள்எனினும்.

இன்னொருபக்கம்ஆதிவாசி,மலையகமக்கள்அன்றாடம்சந்திக்கும்இம்சைகள்காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். போராளிக்குழுக்களுக்கும்,அரசாங்கப்படைகளுக்கும்இடையேஅவர்கள்தினம்தினம்மண்டியிடவேண்டிஇருக்கும்அவலமும்,அவர்களைக்காக்கஎன்றுசொல்லிசண்டைபோட்டுக்கொண்டிருக்கும்அவர்கள்உண்மையில்ஆதிவாசிகளின்உழைப்பையும்,நிம்மதியையும்தான்சுரண்டிஅமைகிறார்கள்என்பதையும்,அக்கறைஅற்றஅவர்களின்மனோபாவத்தையும்எள்ளல்செய்திருப்பார்ஜெமிஉய்ஸ்.

உலகின்எல்லாக்கனவுகளுக்கும்ஒருஅடிநாதம்,உச்சகட்டம்உண்டு.அதுவேஎந்தஒருகனவின்ஜீவனும், அவசியமும்கூட.காட்ஸ்மஸ்ட்பிக்ரேஸியின்ஆன்மாஅதுமுன்வைக்கும்சமூகபிரச்னைபற்றியகேள்விதான்,சமூகசச்சரவுகள்குறித்ததுல்லியபார்வை.மார்க்ஸ்மற்றும்ஏங்கெல்ஸ்முன்வைத்தபுரிதல்.கான்ப்ளிக்ட்தியரி(conflict theory) என்றுஅறியப்படுவது.வர்க்கப்போராட்டங்கள்அல்லதுசச்சரவுகள்குறித்தபார்வை.


The history of all hitherto existing society is the history of class struggles. Freeman and slave, patrician and plebeian, lord and serf, guild-master and journeyman, in a word, oppressor and oppressed, stood in constant opposition to one another, carried on an uninterrupted, now hidden, now open fight, a fight that each time ended, either in a revolutionary re-constitution of society at large, or in the common ruin of the contending classes.
— Karl Marx & Friedrich Engels The Communist Manifesto 1848,

எஞ்சிஇருக்கும்உலகின்,அத்தனைசமூகங்களின்வரலாறு,என்பதும்அதன்வர்க்கப்போராட்டபொதுவரலாறுதான். சுதந்திரமானவர்களுக்கும், அடிமைகளுக்கும்;அறிவுஜீவிக்கும்,பொதுஜனத்துக்கும்; முதலாளிக்கும்,நிலஅடிமைக்கும்; கைதேர்ந்தஉருவாக்குபவனுக்கும்,அதன்கைதேர்ந்தவிற்பனையாளனுக்கும், ஒருவார்த்தையில்சொல்லப்போனால்ஒடுக்குபவருக்கும்ஒடுக்கப்படுபவருக்கும்இடையேமறைமுகமாகவும்,நேரடியாகவும்தொடர்ந்துநிகழ்ந்தஒன்று.அதுநிகழும்ஒவ்வொருமுறையும்சமூகபுரட்சிமறுசீரமைவாகவோஅல்லதுபோராடும்வர்க்கத்தின்அல்லதுவகுப்புகளின்பொதுஅழிவாகவோமுடிவுக்குவந்திருக்கிறது.
-கார்ல்மார்க்ஸ்& பிரெடரிக்ஏங்கெல்ஸ்

ஆதிவாசிகளின்அடிப்படையானகுணம்,அதிசிறந்தகுணம்அவர்கள்எதையும்சொந்தம்கொண்டாடுவதில்லைஎன்பதுதான்.

தன்னுடையது(ownership)என்கிறமனோபாவம்அற்றவர்கள்.

gods must be crazy யின்ஆரம்பகாட்சிகள்இதைஎளிதாகபடம்பிடித்துக்காட்டியிருக்கும்.சான்மக்கள்தங்களுக்குள்கிடைக்கிறஎல்லாவற்றையும்பகிர்ந்துகொள்கிறவர்கள்ஆகஇருந்தார்கள். சச்சரவுஅல்லதுகருத்துவேறுபாடுகள்(conflict) இல்லாதசமூகஅமைப்புஅவர்களுடையது. அவர்களுக்குகிடைக்கிற, அவர்கள்எதிர்கொள்ளநேர்கிறஎதையும்,அவர்கள்தாம்அனைவருக்கும்சேர்ந்தேயோசித்தார்கள்.

ஆனால்முதலில்கடவுளின்கொடைஎன்றுநினைத்த,அவர்களின்வாழ்க்கையில்வந்துவிழுந்தகாலிகோகோகோலாபாட்டில்அநேகசச்சரவுகளைஆரம்பித்துவைக்கிறது.அந்தக்குழுவின்ஒவ்வொருவருக்கும்அதுஒவ்வொருவிதமாய்உபயோகப்படுகிறது.இசைஎழுப்ப,மாவுஉருட்ட, கிழங்குகளை,தானியங்களைஉடைக்கஎனவிரியும்அதன்உபயோகம்,அவர்களுக்குள்அதன்மேல்அவசியம்சார்ந்தஆசைகளைஉண்டாக்குகிறது.குழந்தைகளுக்குள்கூடசச்சரவுஏற்படும்அளவுக்குஅதன்தாக்கம்அதிகம்ஆனவுடன்,அவர்கள்ஒன்றாகஉட்கார்ந்துயோசிக்கிறார்கள்.ஸி' அதுநிச்சயமாகசாத்தானின்பொருள்ஆகத்தான்இருக்கவேண்டும்என்கிறமுடிவுக்குவருகிறான்.அதைஅவர்களின்பூமிக்குஅப்பால்கொண்டுபோய்எறிந்துவிடவேண்டும்என்றுதீர்மானிக்கிறான்.அந்தபூமியின்எல்லைக்குசெல்லஎவ்வளவுநாள்ஆகும்என்றுஅங்கிருப்பவர்கள்யாருக்கும்சரியாகத்தெரியவில்லைஎனினும் xi தனதுபயணத்தைஆரம்பிக்கிறான்.வழியில்நாகரீகமனிதர்களைசந்திக்கிறான்.அவர்களின்ஆஜானுபாகுவானதோற்றமும், அவர்கள்உடன்வைத்திருந்தஅதிநாகரீகபொருட்களும்முதல்பார்வையில் 'கடவுள்கள்' என்றுஅவன்நினைக்கத்தூண்டுகின்றன.ஆனாலும்போகப்போகஅவனுக்குஏற்படும்அனுபவங்கள்அந்த 'கடவுள்கள்''விசித்திரமானவர்கள்' என்றுபுரியவைக்கிறது.

கடவுள்கள்விசித்திரமானவர்கள்!

gods must be crazy!

நம்முடையஎந்தஒருகனவுப்பயணத்தின்முடிவிலும்,எதையாவதுஒன்றைவாங்கிவருவதுநம்சந்தோஷவழக்கம்.அந்தஅற்புதமீள்அனுபவத்தின்ஞாபகமாக.காட்ஸ்மஸ்ட்பிக்ரேஸிநமக்குஅதன்அற்புதசந்தோஷகானகசபரியின்முடிவில்நமக்குபரிசாகஅளிப்பதுநமதுசமூகம்பற்றியமீள்பார்வைஒன்றை.நாம்மிகஆழ்ந்து,தீவிரமாகசிந்திக்கவேண்டியநம்தலைமுறை,அடுத்ததலைமுறை,பற்றியநம்வாழ்நாள்கேள்வியை.

பதிலையும்அதுவேசொல்வதால்தான் gods must be crazy! நம்மறக்கஇயலாபயணமும்.

இன்னொருவனின்கனவு - தொடரும்

- குமரகுருபரன்
திங்கள்தோறும்இரவுகுமரகுருபரனின்'இன்னொருவனின்கனவு' அந்திமழையில்வெளிவரும்....

'இன்னொருவனின்கனவு' பற்றியஉங்கள்கருத்துக்களை content(at)andhimazhai.com என்றமுகவரிக்குஅனுப்பவும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com