'பாடிகாட் ' முனீஷ்வரின் 'ச்சும்மா' – 2

'பாடிகாட் ' முனீஷ்வரின் 'ச்சும்மா' – 2

அவுரங்கசீப்

தமிழர் திருநாளான பொங்கல் தினத்தில் ' அவுரங்கசீப்' நாடகத்தை பார்க்க நேர்ந்தது. இந்திரா பார்த்தசாரதியின் தமிழ் வடிவம் , K.S.இராஜேந்திரனின் இயக்கத்தில் 'உருது'க்கு மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பான நடிப்பு , ஒளி , ஒலி மற்றும் அரங்க வடிவமைப்பால் பார்வையாளர்களை மனங்கவர்ந்த நாடகமானது அவுரங்கசீப் ! மும்பை நாடகவிழா தொடர்கிறது! மும்பையில் நாடகங்கலின் வலிமையும் பார்வையாளர்களின் ஒத்துழைப்பும் நாடக இயக்கத்துக்கு பலம் சேர்ப்பவையாக இருப்பது மனசுக்கு ஆறுதல் ! சென்னையின் துணுக்குத் தோரணங்களை , கிச்சு கிச்சு முயற்சிகளை நினைக்கையில் ' பத்தி எரியுதப்போய் வகுறு'!

நாநோ

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி !

உங்க வாழ்வெல்லாம் மலர வந்துடுச்சுபா "நாநோ" அதாங்கண்ணு ! ஒரு லட்ச ரூவா காரு ! இனிமே யாருக்கும் பசிக்காது ! தூக்கம் நல்லா வரும் ! பாரத குடிமக்களுக்கு ஜன்ம சாபல்யம் ! நானோ தன்யனானேன்!

ரத்தன் டாடா! வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்!

மத்த கார்களெல்லாம் யானை விலை விக்க மலிவு விலையில் கார் தந்தாய் ! காலமெல்லாம் இனி கார்காலம் !

கே.எம்.ஆதிமூலம்

தமிழர் திருநாளில் தாக்கியதொரு சோகம் ! மெல்லியக்கோடுகளால் தமிழர்களின் கலை வலிமைச் சொன்ன நவீனத் தூரிகையாளர் கே.எம்.ஆதிமூலம் மறைந்தார் என்ற அதிர்ச்சி செய்தியது !

மனிதன் இறப்பது என்பது சராசரி நிகழ்வு தான்! பத்தாண்டுகளுக்கு முன்பே தனக்கு இரத்த புற்றுநோய் இருப்பதறிந்து குடும்பத்தினருக்கும் சொல்லாமல் ஒவ்வொரு நாளிலும் மரணத்தை எதிர்நோக்கிய வேளையிலும் , சற்றேறக்குரைய 2000 ஓவியங்கள் தீட்டினாராம் ஆதிமூலம் !

புள்ளிகள் தான் கோடுகளை உருவாக்கும்! கோடுகள் சில சேர்ந்து ஆதிமூலம் என்கிர ஓவிய புள்ளியை உருவாக்கியது தமிழகத்தின் சிறப்பு ! ஓய்வறியாத் தூரிகைக்கு உளமார்ந்த அஞ்சலி.

நீர்கிழிக்கும் மீன்

ஜனவரி 20 , முனைவர் அரங்கமல்லிகா -வின் கவிதைத் தொகுதியான 'நீர் கிழிக்கும் மீன்' - வெளியீடும் விமர்சனமும் சென்னை L.L.A. அரங்கத்தில் நிகழ்ந்தது.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு பிரபஞ்சனின் சுவையான உரைக்கேட்டதும் , இலக்கிய நண்பர்களை சந்தித்து உரையாடியதும் முனீஷ்வருக்கு Recharge !

வாழ்த்துரை வழங்க வந்த தோழஎ நல்லக்கண்ணு . மிகச்சரியாக 10 மணிக்கு அரங்கத்தில் இருந்ததும் உரையில் இருந்த எளிமையும் வியப்பூட்டும் செய்திகள் !

சென்னகுணம் ஆறுமுகம்

இன்று மாலை தோழர் சென்னகுணம் ஆறுமுகம் வீட்டுக்கு வந்திருந்தார். சி.மார்க்சீய பெரியாரப்பொதுவுடையமைக் கட்சியின் தோழர். ஓவ்வோர் ஆண்டும் சிந்தனையாளர் பொங்கல் மலர் தந்துவிட்டு , சிந்தனையாளர் இதழுக்கான சந்தா புதுப்பித்து செல்வார்.

விழுப்புரத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்திலிருக்கும் 'சென்னகுணம்' கிராமத்திலிருந்து வருபவர் விழுப்பிரத்தில் எவர் வீட்டுக்கு சென்றாலும் நடை ! நடை ! நடைதான் !

இது போன்ற COMMITMENT ஆன CADRES - பொதுவுடைமை இயக்கங்களின் பலம்! நந்திகிராம் மார்க்சிஸ்ட்களை இந்த நேரத்தில் நினைவு படுத்தி பார்ப்பவர்களின் தலை சுக்கு நூறாக வெடிக்கும் !

'சிந்தனையாளன்' , பொங்கல் சிறப்பு மலர் 2008 ! கிடைத்தால் படித்து விடுங்கள் !


மிகச்சிறப்பான 'மருது'வின் ஓவிய முகப்போடு , அழகிய வடிவமைப்பு.

ஆழ்ந்த கட்டுரைகள் , தெளிந்த தீர்க்கமான அரசியல் சமூகப்பார்வைப் பதிவுகள் !

சிந்தனையாளன் மலர் ! எப்போதுமே COLLECTORS ITEM !

(மும்பையிலிருந்து 'பாடிகாட் ' முனீஷ்வர் எழுதும் இத்தொடர் ஞாயிறு விட்டு ஞாயிறு வரும்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com