பாதையற்ற எவ்வனத்திலும் சந்தோசம் ஒன்று இருக்கிறது

இன்னொருவனின் கனவு - 28

As you simplify your life, the laws of the universe will be simpler; solitude will not be solitude, poverty will not be poverty, nor weakness weakness.'
-Henry David Thoreau

விட்டு விடுதலையாகி.

எளிமையான, இந்த இரண்டு வார்த்தை,ஒரு வரியின்,ஆகக் கடினமான விஷயம் என்ன தெரியுமா?

அதன் நடைமுறைப் படுத்தல்.

எதை எதை நாம் விடுவது என்கிற முதல் கேள்வியில் ஆரம்பிக்கிறது அதன் சிரமம்.

அது உண்மையிலேயே சிரமம் தானா?

பணம்,இந்தப் பூவுலகில் எல்லாவற்றையும் வாங்கித் தரும் என்று நீங்கள் நம்புபவராயிருந்தால், நெப்போலியன் ஹில்லை,உங்களின் கடவுளாக நினைப்பவர் என்றால்,நீங்கள் முதலாளி ஆன கதையை உலகிற்கும்,ஊருக்கும்,உங்கள் பிள்ளைகளுக்கும்,உரக்கச் சொல்ல ஆசைப்படுபவர் என்றால்,லட்சியம்,லாபம்,முதலீடு,சேமிப்பு,குடும்பம்,எதிர்காலம்,ப்ளா,ப்ளா,போன்றவற்றில் அதி ஆர்வம் கொண்டிருக்கும் கொள்கைக் குன்றாக இருந்தால்,தயவு செய்து இந்தக் கட்டுரையையும், இங்கே நாம் பார்க்கப்போகிற மனிதர்களையும்,காணப் போகிற சினிமாவையும், அது சொல்லிச் செல்லும் உண்மையையும் உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்த வேண்டாம்.

ஆனால்,ஒரு எச்சரிக்கை,அவர்களே,இதே உண்மையை உங்களுக்கு பிற்காலத்தில் சொல்லவும் கூடும். அதைச் செய்யவும் கூடும். பிள்ளைப் பாசத்தால் நீங்கள் வருந்தி இறக்கவும் கூடும்.

ஏனெனில்,இனி வரும் காலமும்,இப்போது இருக்கும் சூழலும் அப்படி.



ஏனெனில்,நம் குழந்தைகள், நம்மை விட புத்திசாலிகள்.நம்மை விட வசதியானவர்கள்.

ஏனெனில்,நம் குழந்தைகள்,நம் மாதிரி அல்லாமல்,வசதியை வெறுத்து,மரணத்தைத் தேடி அலைபவர்களாகவும் மாறக்கூடும்,.அதற்கு,நாம் காரணம் என்பது நம் மரணத்தை நிர்ணயிக்கக் கூடும்.ஏனெனில் பிள்ளையின் பிரிவு என்பது மரணத்திற்கு சமானம் எந்த பெற்றோருக்கும்,எவ் வயதிலும்.

இது ஒரு பயணம்.இது ஒரு புதிய சிந்தனை.புதிய சித்தாந்தம்.புதிய மொந்தையில் பழைய கள்.

ஆதியும் அந்தமுமான உண்மை.

சித்தாந்தம் வாழ்வதும்,அதை உருவாக்குபவன்,மேற்கொள்பவன் அதன் பொருட்டு இறப்பதும் பொது விதி.

இது அந்தப் பொது விதியின் தனி அத்தியாயம்.

இது கதையல்ல நிஜம்.

into the wild(2007).-இது சினிமா.

Christopher Johnson McCandless (February 12, 1968 – August 1992)- கிறிஸ்டபர் ஜான்சன் மெக்கண்டேல்ஸ் இவர் நிஜம்.

முதலில் சினிமா,அப்புறம் அதன் நிஜம்.

கனவை எழுதுவதா,கனவு கண்டவனின் சரித்திரம் எழுதுவதா என்று சந்தேகம் வந்த மிகச் சில தருணங்களில் ஒன்று இந்த அத்தியாயம்.

ஒன்றுக்கு ஒன்று போட்டியிடும் அற்புதங்கள்.

சீன் பென் (sean justin penn,born august-1960),into the wild (2007).

ஹாலிவுட்,அமெரிக்க சினிமாவின் செஞ்சட்டைக்காரர்.இடது சாரி இயக்குனர்.ஆகச் சிறந்த நடிகர். நடிப்புக்காக( Mystic River -2003, and Milk -2008) இரண்டு ஆஸ்கர் விருது வென்றவர். மடோனாவின் காதலன், கணவன், அவரால் வன்மக் குற்றம் சாட்டப்பட்டவர், க்யூப அதிபர் பிடல் காஸ்ட்ரோவை நினைத்த போது சந்திக்கக் கூடியவர்,,ஒரு வார்த்தையில் சொன்னால்,தி ரெபல்.



ஐ ஆம் சாம்,தி டெட் மேன் வாக்கிங்,21 grams,The Tree of Life (நடித்தது), The Indian Runner,The Crossing Guard (1995), The Pledge (2001). 11'09"01 September 11,அப்புறம் இன் டு தி வைல்ட். அவர் இயக்கியது.

அவரை மிஞ்சும் அவரது கனவு- into the wild(2007).

ஆகவே,இங்கே அந்தக் கனவு.

லார்ட் பைரனின் இயற்கைக் கவிதை ஒன்றுடன் ஆரம்பிக்கிறது into the wild.

"பாதையற்ற எவ் வனத்திலும் சந்தோசம் ஒன்று இருக்கிறது,
யாருமற்ற கடற்கரையின் தனிமையிலும் ஒரு பேரானந்தம் இருக்கிறது,
ஆழக் கடலிலும்,அதன் அலைகளின் உறுமலிலும் இருக்கத்தான் செய்கிறது
ஒரு சமூகம்,ஒரு வாழ்க்கை,ஒரு இசை, குறுக்கீடுகள் எதுவும் இன்றி.
நான் மனிதனைக் குறைவாக நேசிப்பவன் இல்லை,
எனினும்,இயற்கையை அதிகமாக நேசிப்பவன்."

மாம்,மாம்... என்னைக் காப்பாற்று...இறைஞ்சும் ஒரு குரல்.

நடு இரவு.நடு வயது தம்பதிகள்.அந்தப் பெண்மணி எழுந்து அழுகிறாள்,கணவனின் மார் சாய்ந்து.

"அது நிச்சயம் கனவு இல்லை.நான் அவன் குரலைக் கேட்டேன்.அவன் தான்.அவன் தான்.நம்ப முடியாது, எனினும் அவன் தான்.க்றிஸ் ..நம் மகன்...அவன் எங்கே போனான்?"

மெல்லிய ஹம்மிங் உடன்,அந்த ட்ரெயின் மெல்ல வெண்மை பூத்த அந்தப் பனி பிரதேசத்துக்குள் நுழைகிறது, அலெக்சாண்டர் சூப்பர் ட்ராம்ப்,1992 என்று அந்த ரயிலின் இரும்பு உடலில் கிறுக்கப் பட்டிருக்கின்றன.அலாஸ்காவின் நகர்ப் பகுதிக்கு அவன் வந்திருக்கிறான்.wayne என்னும் ட்ராவல் மற்றும் லைப்ஸ்டைல் நெட்வொர்க் சைட் மூலம்,"நான் இங்கு வந்து சேர்ந்து விட்டேன்,இங்கே பனிப் பிரதேசத்தில் தொற்றிக் கொள்ள வாகனங்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது,எனினும் வந்து சேர்ந்து விட்டேன்,சில மாதங்கள் தங்குவதற்கான பொருட்கள் இருக்கின்றன,இங்கு காணப் படும் தாவரங்கள் குறித்து ஒரு புத்தகம் வாங்கியிருக்கிறேன்.நீங்கள் அறிவீர்கள்,இது என் கனவுப் பயணம். திரும்ப காலங்கள் ஆகக் கூடும்". திரையில் ஓடும் இவ் வரிகளுடன் விரிகிறது அப் பனி மலை.. அந்த வாகனம் அவனை,ஓரிடத்தில் இறக்கி விடுகிறது.அந்த வாகன ஓட்டுனர்(சீன்-பென்) அவனிடம் இரண்டு பூட்களைக் கொடுத்து"இது உன் கால்களை சற்று வெதுவெதுப் பாக வைத்திருக்கும்,அதன் உள்ளே என் மொபைல் நம்பர் இருக்கிறது,நீ உயிரோடு இருக்கும் பட்சத்தில் வெளியே வந்து எனக்கு கூப்பிடு" என்று புன்னகையைப் பரிசாக அளித்து விட்டுப் போகிறார்.இனி,அவனும்,அலாஸ்காவும், பனி படர்ந்த ஆள்களின் வாசம் அற்ற அதன் ஏகாந்தமும்.



நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும் அந்த ஏகாந்தப் பனி யின் காட்சிகள்.நம்மை ஒரு சிறு புள்ளி என உணர்த்தும் இயற்கையின் விஸ்வரூபம்,அவனது முகத்தில் நீண்ட பயணத்தில் இருந்ததற்கான அடையாளங்கள்,இருக்கின்றன.தாடி,வளர்ந்திருக்கிறது.ஆனால்,அந்தப் பனிக்காற்றுக்குள் அவன் கண்கள்,ஒளிர்கின்றன.தேடலின் களைப்பைத் தாண்டி அபூர்வ புதையலை அடையப் போகிற பரவசம் அவற்றில் பிரகாசிக்கிறது.அவன் நடக்கிறான்.நதி ஒன்றைக் கடக்கிறான்.ஆளற்ற கைவிடப் பட்ட ட்ராம் வண்டி அங்கு அவனுக்குக் காத்துக் கொண்டிருக்கிறது.அதன் உள்ளே சில உபயோகமான பொருட்கள் இருக்கின்றன.எரியும் ஒரு லைட்டர்,படுக்க ஒரு இருக்கை,அதை விட அவனுக்கு ஒரு கூரை கிடைத்திருக்கிறது இந்தப் பனி பூமியில்.அங்கிருக்கும் மரப் பலகை ஒன்றில் தனது பயணத்தை அவன் இவ்வாறு செதுக்குகிறான்..

இரண்டு வருடங்கள் நடந்திருக்கிறான் அவன்.
தொலை பேசி அழைப்பு இல்லை.சிகரெட்டுகள் இல்லை,வளர்ப்புப் பிராணிகள் இல்லை.
அதி சுதந்திரம்.
அவன் அதீத மனம் கொண்டவன். .
ரசனையான பயணி.
சாலைகள் அவனது வீடு.
இது அவனது ஆன்ம பயணத்தின் கடைசிக் கட்டம்..
இயற்கை உடன் ஆன அவனது நேசத்தின் அதீத கட்டம்.
நாகரீக விஷத்தை விட்டு விலகிய பறவையைப் போல, தனியே இந்நிலம் நடந்து,மனிதர் கடந்து, இயற்கையின் அதி ஏகாந்தத்தில்,பொய்மையைக் கொல்லும் அதன் தட்ப வெப்பத்தில்,தனது ஆன்மப் பயணத்தின் வெற்றியை பரிசோதிக்க,பறைசாற்ற,அவன் தொலைந்திருக்கிறான்.
அலாஸ்காவின் அண்டப் பெரு வெளியில்.
அலெக்சாண்டர் சூப்பர் ட்ராம்ப்-1992,மே.
.
ஆனால், அவனது பெயர் அது அல்ல.

இசையுடன் பின்னோக்கி அவனது கல்லூரிக் காலத்திற்கு செல்கிறது ஞாபகங்கள்.

into the wild' முழுதும் நான் லீனியர் முறையில் சொல்லப் பட்ட படம்.அலாஸ்காவுக்கும்,அவனது முந்தைய இரண்டு வருட பயணத்துக்குமாய் முன்னும் பின்னும் அலையும் காட்சிகள்.

அவன் பெயர் கிறிஸ்டபர் ஜான்சன் மெக்கண்டேல்ஸ் (Christopher McCandless).

அவனது பெற்றோர்கள் மிக வசதியானவர்கள்.தம் பிள்ளைகள் மேல் அக்கறை செலுத்துபவர்கள்.

தம் பிள்ளைகள் சிரமப் படக் கூடாது என்று நினைப்பவர்கள்.

அவனுக்கு ஒரு சகோதரி இருக்கிறாள்.இந்தப் படம் முழுதும் அவள் தான் தன் தமையனைப் பற்றி சொல்லப் போகிறாள்.அவளே,அவனது ஆன்மாவின் வாய்ஸ் ஓவர், into the wild-ல்.

அது வழக்கமான ஒரு பட்டமளிப்பு விழா.வருடம் 1990.Emory University, Atlanta, Georgia.

எனினும்,யார்றா,இவன்,அல்லக்கை,முட்டாள்,என்று,விழுந்து,புரண்டு,நானும்,நீங்களும்,ஆச்சர்யப்படும் மனிதனின் கதை இங்கிருந்து தான் ஆரம்பம்.

ஆகச் சிரமம் சித்தாந்தத்தை சினிமா ஆக்குவது.சீன் பென் அதை பனி பொழிவது மாதிரி நிகழ்த்தி இருப்பார். பயணத்தின் ஆன்மாவை,அதன் அலைச்சலை,மர்மங்களை,ஆசுவாசங்களை,யோசிக்க வைக்கும் சிந்தனைகளுடன் கேமராவில் பதிவு செய்த அனுபவங்களில் மறக்க முடியாத வாழ்வனுபவம் இன் டு தி வைல்ட்.ஏனெனில் பயணம் செய்யும் அதி அற்புத விஷயம் அதன் மறக்க முடியாத அனுபவங்கள் மட்டுமே.into the wild மனதின் பயணமும்,மனதின் அனுபவமும் கூட.

மறக்க முடியாத அலெக்சாண்டர் சூப்பர் ட்ராம்ப் என்கிற பயணியின் ஆரம்பம் ஒரு மனதின் பயணத்தில் இருந்து தான்.இந்த பட்டமளிப்பு விழா தான்,அதன் முதல் புள்ளி.எமொரி பல்கலைக் கழகத்தின் அந்த இளநிலை பட்டதை க்ரிஸ் மெக்கண்டேல்ஸ் வாங்குவதை மற்ற எந்த தாய் தந்தை மாதிரி அவனுடைய வர்களும் ஆனந்தம் பொங்கும் கண்களும்,முகமுமாய் ரசிக்கிறார்கள்.அவன் வேறு ஒன்றை யோசித்துக் கொண்டிருக்கிறான் அப்போது,அங்கும் இங்கும் அலையும் ஞாபக அலைகளில் அவன் மாதிரி அவனது பெற்றோர்களும் தங்கள் பட்டம் வாங்கிய முதல் தருணத்தில் நிற்கிறார்கள்,அவன் நினைக்கிறான்,"நிச்சயமாக அவர்கள் மிக சந்தோசமாய் இருந்திருக்கக்கூடும், அம்மாவும், அப்பாவும், ஆணும், பெண்ணுமாக, அவர்களின் வாழ்க்கையின் அடுத்த ஸ்டெப் அல்லவா... அவர்கள் நிஜமாகவே கள்ளம் கபடமற்ற மனிதர்கள் தான், தனித் தனியாக,அவர்களின் அந்த முதல் சொந்த சாதனைத் தருணத்தில்,ஆயினும் நான் அவர்களிடம் போய் சொல்ல விரும்புவது....தயவு செய்து நீங்கள் இருவரும் கணவன் மனைவியாக சேர மட்டும் வேண்டாம்,தனித் தனியாக நல்லவர்களாக இருக்கும் நீங்கள்,சேர்ந்து மிகப் பெரிய தவறுகளை செய்யப் போகிறீர்கள்,உங்களுக்கு மட்டும் அல்ல,உங்கள் குழந்தைகளுக்கும்.உங்கள் கனவுகளை,அவர்கள் மேல் சுமத்தும் முதல் நொடியில்,அந்த தவறு ஆரம்பமாகக் கூடும்".

ஏன் க்ரிஸ் அவ்வாறு யோசிக்கிறான்?

அவன் கொஞ்சம் கிராக்கா? இல்லை அவனது பெற்றோர்கள் கொடுமைக் காரர்களா?

இங்கிருந்து நிஜம் ஆரம்பிக்கிறது.

அந்த நிஜம் முதலில் அறியப்படும் போது அவன் இறந்து போயிருந்தான்.அலாஸ்காவின் அந்த வெண்டிடிகா ஏரி அருகில்.அலாஸ்காவில்.அவன் இறக்கும் போது அவனது எடை முப்பது கிலோ.

அவன் எப்படி இறந்தான் என்பதும் இன்னும் விவாதத்தில் தான் இருக்கிறது.குழப்பம்.



எனினும்,அவனதுஆரம்பம்ஆகத்தெளிவு.அவனதுபயணத்தின்காரணமும்.ஏனெனில்அதுஒருஅற்புதசித்தாந்தத்தின்முதல்முயற்சி.

கிறிஸ்டபர்ஜான்சன்மெக்கண்டேல்ஸ் (February 12, 1968 – August 1992).

அவனைப்பற்றிஅவனதுசகோதரிசொல்கிறமாதிரிஅமையும்அதன்சினிமாசொல்லல்.

நேரடியாகவேஅறிவோம்அவனைஇங்கு.

கூமுட்டைக்கூட்டத்தில்தனித்திருக்கவிழைந்தவன்அவன்.அவனைப்பொறுத்தவரைஅந்தக்கூட்டம்அவனதுஅப்பாஅம்மாவில்ஆரம்பிக்கிறது.அந்தக்கூட்டத்திடம்இருந்துஅவனதுதனிமைஇவர்களுடன்கழிகிறது.இவர்கள்என்றால்இவர்களின்சிந்தனை.அதைச்சொல்லும்இவர்களின்புத்தகங்கள்.நாம்அறியாதவர்கள்இல்லை,அந்தஒருபெயரைத்தவிர.அவரைக்கூடநம்மில்சிலபேர்அறிந்திருக்கக்கூடும்.தமிழன்அவ்வளவுகூமுட்டைஅல்லஎன்பதாலும்,தேடித்தொடும்பழக்கம்இல்லாதவன்அல்லஎன்பதாலும்.

Jack London, Leo Tolstoy, W. H. Davies and Henry David Thoreau

ஜேக்லண்டன்,லியோடால்ஸ்டாய்,டபிள்யூ.ஹெச்.டேவிஸ்,அப்புறம்நாம்அதிகம்அறியாதஅந்தமகத்தானமனிதன்,ஹென்றிடேவிட்தொரவ்.

ஹென்றிடேவிட்தொரவ் (Henry David Thoreau).

நாம்அறியவேண்டியசித்தாந்தம்இந்தப்பெயரில்இருந்துஆரம்பம்.

தொரவ்என்பதைதுறவுஎன்றும்கொள்ளலாம்.

துறவின்கடவுள்,சித்தாந்தம்அவன்,ஹென்றிடேவிட்தொரவ் (Henry David Thoreau).

அவன்புதிததாகஎதுவும்சொல்லிவிடவில்லை,நம்பட்டினாத்தாரைத்தாண்டி.

எனினும்தொரவ்சமகாலஞானி.

Henry David Thoreau (July 12, 1817 – May 6, 1862) was an American author, poet, philosopher, abolitionist, naturalist, tax resister, development critic, surveyor, historian, and leading transcendentalist.

தனிமனித, குடியியற்போரை, அவர்களேதேர்ந்தெடுத்த,பொதுஜனநாயகஅரசாங்கத்திற்கு, எதிராக, சித்தாந்தத்தில்நிகழ்த்தியவன்.

அவன்சொல்கிறான்...

"நான்வாழவிருப்பப்பட்டேவனத்திற்குசென்றேன்.ஏனெனில்நான்அதை,அந்தஅனுபவத்தைவாழும்போதேதெரிந்துகொள்ளஆசைப்பட்டேன்,நான்இறந்தபிறகுஅல்ல,அல்லதுஎன்இறக்கும்தருவாயில்அல்ல,நம்ஞானியரைப்போல்.வாழ்க்கைஎன்றுநிறுவப்படாதஒன்றைவாழநான்ஆசைப்படவில்லை,நாம்வாழும்இந்தவாழ்க்கையைப்போல்.நான்அந்தகடமையில்இருந்துவிலகவும்ஆசைப்படவில்லை,அதுதேவையற்றசிரமங்களைக்கொண்டுவரும்என்கிறகாரணத்திற்காக. வாழ்க்கையின்அத்தனைஉயிர்அம்சங்களையும்உறிஞ்சஆசைப்பட்டவன்நான்,ஒருவீரனைப்போலஎன்அனுபவத்தைச்சொல்லஆசைப்பட்டவன்,அதற்கானஎன்பயணத்தைஇந்தஅனுபவத்திலும்,மிச்சம்இருப்பவற்றைஎன்அடுத்தபயணத்திலும்,பயணமேவாழ்வு.எனக்கு.யாருக்கும்."
— Henry David Thoreau, Walden, "Where I Lived, and What I Lived For"

அனார்ச்சிஸ்ட்(anarchist) என்றால்என்ன? யார் ? என்றுதெரியுமா?

"absence of a leader" or "without rulers".

ஆள்பவர்கள்அற்றவர்கள்அல்லதுதலைவன்அற்றவர்கள்.

யார்இந்தஅல்லக்கைகள்?

அதுமறுபடியும்இன்னொருபெயரில்இருந்துஆரம்பிக்கிறது.

நிஜத்தின்கதை.சீன்பென்கனவுகண்டசினிமாவின்மூலம்.

Jon Krakauer .ஜான்கிராக்கர்.

யார்அவர்?

-into the wild- இன்னொருவனின்கனவுதொடரும்.

இன்னொருவனின்கனவு - தொடரும்

- குமரகுருபரன்
திங்கள்தோறும்இரவுகுமரகுருபரனின்'இன்னொருவனின்கனவு' அந்திமழையில்வெளிவரும்....

'இன்னொருவனின்கனவு' பற்றியஉங்கள்கருத்துக்களை content(at)andhimazhai.com என்றமுகவரிக்குஅனுப்பவும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com