தொடர்கள்
05-01-94
புதுவை - 08
அன்புடன் சாந்திக்கு,
ராஜ் தாத்தாவின் பொங்கல் வாழ்த்து..
இந்த பொங்கலுக்கு எதாவது விசேசம் உண்டா என்று தெரியலை.
உண்டு என்றால் ஒன்றைச் சொல்லலாம்,
உன்னுடைய தாடி சித்தப்பாவின் பெயர் மாறிவிட்டது.
இனிமேல் அவரை அதாடி சித்தப்பா என்றுதான் குறிப்பிட வேண்டியதிருக்கும் நீ.
என்ன முன்னேற்றம் பார்!!
தாடி மழித்த அந்த மூஞ்சியை இன்னும் நான் நேரில் பார்க்கலை.
பார்த்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் இருக்கிறேன்.
கடலூர் மக்கள் மற்றும் நீயும் உனது டைப்ரைட்டரும் செளக்யந்தானே?
அன்புடன்,
கி.ரா.