பிரியங்களுடன் கி.ரா – 14

பிரியங்களுடன் கி.ரா – 14
Published on

07.11.93

புதுவை  - 08

உன் மனசைச் சுமந்து கொண்டு வந்தது கடிதம். உள்ளங்கை அகலத்தில் உனக்கு என்று கடையில் நீல நிறத்தாள் விற்பான் போல! கடுகைவிடப் பெருசாக எழுதுகிறது உன் பேனா.

பாட்டியும் நானும் சுகம். தீபாவளிக்கு நான் ஒரு கைத்தறிக் கைலி எடுத்துருக்கோம். பாட்டிக்குக் கொஞ்சம் சுமாரான நல்ல சேலை.

தாடி சித்தப்பா புறப்படும் போது சொன்னார்; காந்திக்கு பிறந்தநாள் இன்று என்று. இந்த வாழ்த்து எல்லாம் எழுதுறதில்லை நான்.

அன்று என்னமோ ஒரு வரி எழுதுவமேன்னு தோன்றியது..பதில் ஒரு கடுகுக் கடிதம்! வந்துவிட்டது உன்னிடமிருந்து.

 சீராக போகிறது வாழ்க்கை என்று குறிப்பிட்டிருக்கிறாய் அதுபோதும். என்ன வேணும் அதுக்குமேல் கை எட்டுகிறதூரத்தில் இருந்தால் முதுகில் ஒரு தட்டு வைக்கலாம்.

அன்புடன்,

கி.ரா.

logo
Andhimazhai
www.andhimazhai.com