பிரியங்களுடன் கி.ரா – 15

பிரியங்களுடன் கி.ரா – 15
Published on

13.03.1991

புதுவை - 08

பிரியமுள்ள பேத்திக்கு, நலம்.

வளவனூர் பட விழாவுக்கு நீங்கள் வருவீர்கள் என்று மூன்று பேருக்கும் பணம் கட்டியதுதான் மிச்சம். ஆட்களை திசையில் பார்க்க முடியலை. ரொம்ப ஏமாற்றம்.

இப்பொ மெட்ராஸ் போயிருந்த போது, சாந்தியை எழுத்து வேலைக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் உதவிக்கு வரச் சொல்லலாமே; சொன்னாள் வருவாளே என்று சித்தப்பா சொன்னார்.

அப்பா உத்தரவு தரணுமே. அப்பாவிடம் கேட்டுக் கொண்டு உதவலாம் தான். பாவம் வாரம் பூராவும் உழைத்துவிட்டு விடுமுறையில் விட்டாத்தியாக இருப்பதையும் கெடுகக வேண்டாமா என்றிருக்கிறது.

சும்மாவாவது ஒரு நாள் வா. ஆஸ்ரமம் எல்லாம் பார்க்கலாம்.

சித்தப்பா கடலூர் சொன்னபடி வந்தாரா?

நிறைய புத்தகங்கள் படிக்கிறாய்; நல்ல இலக்கியப் புத்தகங்களை படிக்கிறாய்.  அது தான் முக்கியம்.

நெய்வேலிக்கு நான் கணவதியோடு ஒரு நாள் வரணும்.

கடிதங்கள் உனக்கு ஓய்வு தருவதாய். நல்ல இளைப்பாறலாய் இருந்தால் தொடர்ந்து எனக்கு

எழுதலாம்.

இது நல்ல வடிகாலும் கூட.

அன்புடன்,

கி.ரா.

logo
Andhimazhai
www.andhimazhai.com