தொடர்கள்
இடைசெவல்
18.06.57
என் அருமை நடராஜனுக்கு,
இனி உங்களிடமிருந்து கடிதம் வராது என்று தெரிந்து கொண்டேன். ஆகவே நானே முன் வந்து எழுதுகிறேன்.
நாம் ரயிலில் சந்தித்துப் பிரிந்ததும், ரயிலிலேயே கொஞ்சதூரம் பேசிக்கொண்டு வந்ததும், ரஸமான சம்பவம். இல்லையா? எல்லாவற்றிற்கும் மேல் நாம் வால்பேரி தின்றதுதான்.
உங்கள் பாட்டில் நறிச் நறிச் என்று நொறுக்கி எடுத்தீர்கள். நானோ பற்கள் காரணமாக கடிக்கவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் திண்டாடியதை இப்பவும் நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.
கொக்குக்கு நரி விருந்து வைத்த கதை ஞாபகம் வருகிறது.
அன்புடன்,
கி.ரா.