பிரியங்களுடன் கி.ரா – 20

பிரியங்களுடன் கி.ரா – 20
Published on

16.07.53

இடைசெவல்

நேற்று ஒரு அவசரமான ஜோலியாக கோவில்பட்டி போகிவிட்டேன். ஆகவே குறித்த தவனையில் உங்களுக்கெல்லாம் கடிதம் எழுத முடியவில்லை!

இங்கிலீஷ் (புதிய சீன, ஹங்கோ) பத்திரிகைகள் கிடைத்திருக்குமென்று நம்புகிறேன். பழைய பத்திரிகைகள் ஆனாலும் உங்கள் பொழுது போக்குக்கு நல்ல வசதியாக இருக்கும். தாத்தா (டி.கே.சி) எனக்கு அனேகமாக பதில் எழுதமாட்டார் என்றே நம்புகிறேன். ஏனென்றால் நான் முன்னால் எழுதிய கடிதங்களுக்குகெல்லாம் அவர்கள் பதில் எழுதியது இல்லை; அதுவும் இப்பொழுது பலஹீனமும் நோயும் வந்து சேர்ந்துகொண்டது.

நீங்கள் கடிதம் எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு. உங்கள் கடிதம் கண்டுதான் நான் விரிவான பதில் எழுத வேண்டும். ஆகவே இச்சிறு கடிதத்தின் மூலம் நம்முடைய கடிதப்போக்குவரத்தை நான் ஆரம்பித்துவைக்கிறேன்.  

அன்புடன்,

கி.ரா.

logo
Andhimazhai
www.andhimazhai.com