பிரியங்களுடன் கி.ரா – 26

பிரியங்களுடன் கி.ரா – 26

11-10-13

புதுவை – 08

நண்பர் தீப.நடராஜனுக்கு,

“சுக்குக் கண்ட இடத்தில் பிள்ளை பெறமுடியுமா?” என்று வாசகம்..

பெறமுடியும் என்பதைத்தான் காட்டுகிறது இந்த இந்த “வெட்டி” எழுத்து. நகல் பண்ணாமல் அப்படியேப் பிறந்த குழந்தையைக் கழுவாமல் தொப்புள் கொடியோடு தந்த மாதிரி.

“வெட்டி” என்றால் என்ன என்று யாரும் கேட்டால், தெரியாது என்று சொல்லிவிடுங்கள்.

“வெட்டி பந்தா” என்பார்கள். இந்த முதல் மரியாதைகளும் எனக்கு அப்படித்தான் தெரிகிறது.

எங்கள் குலதெய்வம் கோவிலில் ஒரு வழக்கம் வைத்திருக்கிறார்கள். முதல் தீர்த்தம் ஒரு பெண் குழந்தைக்கு; அதும் எந்தக்குழந்தை வயதில் குறைந்ததோ அந்தப் பெண்குழந்தைக்கே..

அந்த அம்மன் தோற்றத்தில் இன்னைக்கு குழந்தைபோலவே இருந்ததாம். இடுப்பில் ஒரு மூடிபோட்ட பனைநார்ப் பெட்டியும் கையில் சிறு பிறம்பும் வைத்திருந்ததாம்.

இந்த அம்மன் தான் எங்கள் மூதாயர்களை துலுக்க ராஜாவின் படைகளிடமிருந்து இவர்களை காப்பாற்றியதாம். (கோபல்ல கதையில் படித்திருப்பீர்கள்)

ராஜபாளையத்திற்கு எப்படி வந்து திருப்பப் போறனோ என்று மலைப்பாக இருக்கு.

பார்ப்போம்..

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com