பிரியங்களுடன் கி.ரா – 7

பிரியங்களுடன் கி.ரா – 7
Published on

22.09.2004

நெய்வேலி சாந்தி குடும்பத்தார் அனைவர்களுக்கும் தாத்தா பாட்டியின் ஆசிகள்.

புத்தக வெளியிட்டு விழா, பிறந்த நாள் விழா, விருது வழங்கும் விழா அனைத்துக்கும் குடும்பத்துடன் ஒரு சேர வந்து சிறப்பித்து சிறப்புக் கொண்டீர்கள்.

சாந்தியின் பேச்சு நல்லாவே அமைந்துவிட்டது சக்கரைப் பொங்கல் போல. எந்தத் தேர்தலிலும் சாந்தி நிற்கலாம் இனி; டிப்பாசிட் கிடைத்து விடும்! ( டிப்பாசிட் கிடைப்பதும் ஒரு வெற்றிதானே). சவுகரியமாய்ப் போய் சேர்ந்தோம் என்று சாந்தியிடமிருந்து செய்தி வரவில்லையே என்று கணவதி கவலைப்பட்டாள். கடிதம் வரும் என்று சொன்னேன்.

விழாவில் எடுத்த படங்கள் ரெண்டை இத்துடன் அனுப்பியிருக்கிறேன். 

குடும்ப போட்டோ ஆல்பத்தில் போட்டு வைத்துக்கொண்டால் நினைக்கும் போதெல்லாம் எடுத்துப் பார்த்து மகிழலாம்;

பழைய நினைவுகளில் மூழ்கலாம். எடுக்கப்பட்ட எந்தப் படங்களிலும் சங்கமிக்குட்டியையும் கணேஷ் பிள்ளை இருவரையும் காணோம்.

நீங்கள் அனைவரும் வந்துட்டுப் போனது இனிய நினைவுகளாக மணக்கின்றன.

அன்புடன்,

கி.ரா.

logo
Andhimazhai
www.andhimazhai.com