கத்தியைக் காட்டி மிரட்டி....

கத்தியைக் காட்டி மிரட்டி....

நியூயார்க்கில் உள்ள ஹண்டர் கல்லூரி பெண் பேராசிரியர் ஒருவர் கத்தியை எடுத்துக்கொண்டு நியூயார்க் போஸ்ட் நிருபர், புகைப்படக்கலைஞரை துரத்தி இருக்கிறார். இந்த கல்லூரியில் கருச்சிதைவுக்கு எதிரான மாணவர்கள் குழுவாகக் கூடி  பிரச்சாரம் செய்துள்ளனர். இதை அந்த பேராசிரியர் தடுத்துள்ளார். கருச்சிதைவு செய்துகொள்வதற்கான உரிமை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்க இந்த பேராசிரியர் வீட்டுக்குப் போனதாகவும் அங்குதான் கத்தியைக் காட்டி மிரட்டப்பட்டதாகவும் நிருபர் தெரிவித்தார். இந்த காட்சி கார் காமிரா ஒன்றில் பதிவாகி, காணொளி வெளியானது. அப்புறம் என்ன? கல்லூரி நிர்வாகம் இவரை வேலையை விட்டு அனுப்பிவிட்டது! அதெல்லாம் சரி.. அமெரிக்கர்கள் இன்னும் கத்தியை எல்லாம் காட்டி மிரட்டிக்கொண்டிருக்கிறார்களா என்ன? துப்பாக்கியைத் தூக்குவதை கைவிட்டு விட்டாய்ங்களா?

எப்போது குறை சொல்லத் தொடங்குகிறோம்?

காதல் என்பது என்ன? பிரபல நவாசுதீன் சித்திக் சமீபத்திய பேட்டி ஒன்றில் அழகாகக் குறிப்பிடுகிறார்:

ஒருவர் மற்றவருடன் இணைந்துவாழ்வதில் காணும் மகிழ்ச்சியே காதல் என்பேன். தலாய் லாமா, காதல் என்பது ஒருவரைப் பற்றி மற்றவர்கள் மதிப்பிடாமல் இருக்கும் நிலை என்பார். உண்மைதான். காதலில் இருக்கையில் நாம் ஒருவரை மதிப்பீடு செய்வதில்லை. காதல் குறைந்த பின்னரே ஒருவரை ஒருவர் மதிப்பிடுகிறோம். ஒருவரை ஒரு குறை சொல்லத் தொடங்குகிறோம். காதல் ஒரு ஆண் பெணுக்கு இடையிலானதாக இருந்தாலும் ஒரு துறை மீதானதாக இருந்தாலும் சரி.. எப்போதும் குறையே சொல்லாது.

இயற்கையைக் காதலித்துப் பாருங்கள். அது எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்!

வரிசையில் நமக்கு என்ன இடம்?

உலகம் முழுக்க எல்லா நாடுகளிலுமே ஆளும் அரசுகளுக்கு நெருக்கமான ஒரு சில தொழில்நிறுவனங்கள் வளர்ச்சி காண்கின்றன. இந்த பொருளாதார வளர்ச்சியை ஆங்கிலத்தில் Crony capitalism என்று அழைக்கிறார்கள். அரசுக்கு ஆதரவான நிறுவனங்களின் வளர்ச்சியை வைத்து சுமார் 42 நாடுகளைப் பட்டியிலிட்டு எகானாமிஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் முதலிடம் பிடித்திருப்பது ரஷ்யா. அடுத்த இடம் செக் குடியரசு. அடுத்தது மலேசியா, சிங்கப்பூர், மெக்சிகோ. அரசுக்கு ஜால்ரா போட்டால் அந்த நிறுவனம் வளர வழி செய்துகொடுக்கப்படும். சீனாவுக்கு இதில் இடம் 21. இந்தியாவுக்கு இந்த பட்டியலில் பத்தாவது இடம்! ஒண்ணும் பெருமைப் பட்டுக்க வேண்டியதில்லை! ஒண்ணாவது இடத்துக் குப் போகாமல் இருந்தா சரிதான்!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com