போலி கர்ப்பம்

போலி கர்ப்பம்

போலி கர்ப்பம்

ஜார்ஜியாவை சேர்ந்த பெண் ஒருவர் பணத்துக்காக ஆசைப் பட்டு, கர்ப்பிணியாக நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

ஜார்ஜியா நாட்டின் வெளியுறவுத்துறை இயக்குநரகத்தில் பணியாற்றி வந்தவர் ராபில் ஃபால்காம். 43 வயதான இவர், கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தனக்கு பிரசவ கால விடுமுறை வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார்.

இதையடுத்து இவருக்கு ஒரு வருடச் சம்பளமாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.55 லட்சம்) பணத்துடன் விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மே 1ஆம் தேதி தனக்குக் குழந்தை பிறந்துவிட்டதாகக் கூறி குழந்தையின் புகைப்படங்களை மற்றவர்களுக்கு அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய ஒவ்வொரு புகைப்படத்திலும் குழந்தை முகம், நிறம் போன்றவை ஒரே மாதிரி இல்லை. இதனால் ஏமாற்றுகிறாரோ என்ற சந்தேகம் வலுத்தது. இப்போது விசாரணை நடந்துவருகிறது. . அவர் மீதான வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் சுமார் 77 லட்சம் அபராதமும் ஃபால்காமுக்கு விதிக்கப்படலாம் என்கின்றனர்.

வரிசையில் நின்னா துட்டு

சும்மா வரிசையில் நின்று லட்சக்கணக்கில் ஒருவரால் சம்பாதிக்க முடியும் என்றால் நம்புவீர்களா?

அமெரிக்காவில், நிறுவனம் ஒன்று புதிய பொருளை வெளியிடுகிறது என்றால், அந்த நிறுவனத்தின் முன்பு மக்களின் வரிசை நீண்டு காணப்படும். புதிய பொருட்களை வாங்குவதற்கும், தியேட்டரில் டிக்கெட் எடுப்பதற்கும் மக்கள் முட்டி மோதிக்கொள்வதைப் பார்த்த  நியூயார்க் பகுதியை சேர்ந்த சாமுவேல், ‘உங்களுக்காக வரிசையில் நிற்பதற்கு தயார்‘ என்று சமூகவலைத்தளத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அப்படி முதன் முறையாக ஐபோன் வெளியிட்ட போது வரிசையில் நின்றதற்காக ரூ. 24 ஆயிரம் சம்பாதித்திருக்கிறார் சாமுவேல்.

மற்றவர்களுக்காக வரிசையில் நிற்கும் வேலையில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்ட, அடுத்ததாக வரிசையில் நிற்கும் ஆட்களைக் கொடுக்கும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதில் 20லிருந்து 30 பேர் வேலை பார்க்கிறார்கள். இவர்களும் சாமுவேலைப் போல வரிசையில் நின்று கையை நிறைய சம்பாதிக்கின்றனர்.

வரிசையில் நிற்பதற்காக கட்டணத்தையும் சாமுவேல் நிர்ணயித்துள்ளார். முதல் இரண்டு மணி நேரத்திற்கு 3,377 ரூபாயும், அரை மணி நேரம் கூடினால் அதற்கு 750 ரூபாயும் வசூலிக்கின்றனர். நம்மூரில் அஜீத் படத்துக்கு டிக்கெட் வாங்க வரிசையில் நின்றால்  துட்டு கிடைக்குமா?

நடிகை டாப்ஸி இருக்கிறாரே.... அவருக்கு ஒரு தங்கை இருக்கிறார். பெயர் ஷகுன். மணப்பெண் அலங்காரத் தொழிலில் இருக்கிறாராம். அவர் வெளியிட்டிருக்கும் அட்டகாசமான படங்களைப் பார்த்து இணையதளவாசிகள் டாப்ஸியின் தங்கையும் ‘டாப்' என்கிறார்கள்!

மார்ச், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com