ஜிவி பிரகாஷ், மோகன் லால், எம்எஸ் பாஸ்கர் 
சினிமா செய்திகள்

தேசிய திரைப்பட விருதுகள்: ஜி.வி. பிரகாஷ், எம்.எஸ். பாஸ்கர் விருதை பெற்றனர்!

Staff Writer

2023ஆம் ஆண்டிற்கான 71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விருதுக்கு தேர்வான கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கெளரவித்தார்.

இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954ஆம் ஆண்டு முதல் 'தேசிய விருதுகள்' வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் 2023ஆம் ஆண்டிற்கான 71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கெளரவித்தார்.

சிறந்த தமிழ் படம் மற்றும் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதுகளை ‘பார்க்கிங்’ படம் வென்றது. அப்படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார்.

இந்நிலையில், ‘பார்க்கிங்’ படத்தின் தயாரிப்பாளர் சினிஷ் , இயக்குனர் ராம்குமார் பால கிருஷ்ணன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் தேசிய விருதுகளை பெற்றனர்.

மேலும், வாத்தி படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரும் தேசிய விருது பெற்றார்.

அதேபோல், தாதா சாகேப் பால்கே விருதை மோகன் லாலுக்கு வழங்கி கெளரவித்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.

விருதை பெற்றவர்களுக்கு இணையத்தின் வழியாக பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.