புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி 
தமிழ் நாடு

புதுச்சேரி ஆளும் கூட்டணி தொகுதிப் பங்கீடு முடிவு!

Staff Writer

புதுச்சேரியில் ஆளும் கூட்டணி பிளவுபடும் சூழல்ஏற்பட்டு திடீர் பரபரப்பு உண்டானது. ஆனால் ஒரே நாளில் நிலைமை மாறி சுமுகமாகியுள்ளது. 

முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்திருந்தது. ஆனால், பா.ஜ.க. தரப்பிலோ புதிதாகக் கட்சியைத் தொடங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயகக் கட்சியைக் கூட்டணிக்குள் சேர்க்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தார்கள். ஆனால் இதை ரங்கராசமி முற்றிலுமாக நிராகரித்துவிட்டார். 

மேலும், மாநில அந்தஸ்து தொடர்பாகவும் பிடிவாதமாக இருந்தவர், தன்னைச் சந்திக்கக் காத்திருந்த மைய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவையும் சந்திக்காமல் திருச்செந்தூருக்குச் சென்றுவிட்டார். 

அதையடுத்து, பிரதமர் மோடி அளவுக்கு ஆலோசனை நடத்தப்பட்டது. 

இந்நிலையில் இன்று மன்சுக்கைச் சந்தித்த ரங்கசாமி, கூட்டணியை இறுதிப்படுத்தினார். அதன்படி, அவருடைய கட்சி 16 தொகுதிகளிலும் பா.ஜ.க. 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க., ல.ஜ.க. ஆகியவை தலா 2 தொகுதிகளிலும் போட்டியிடும்.