பாபாஜி குகையில் தியானம் செய்யும் ரஜினிகாந்த்
பாபாஜி குகையில் தியானம் செய்யும் ரஜினிகாந்த்

பாபாஜி குகையில் தியானம் செய்த நடிகர் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த், சுமார் இரண்டு மணி நேரம் மலையேறிச் சென்று, பாபாஜி குகையில் தியானம் செய்வது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பே ரஜினிகாந்த் ஆன்மீக சுற்றுப்பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள தயானந்த் சரஸ்வதி மடம் வியாசர் குகை, சரஸ்வதி நதி மறையும் இடத்திற்கு ரஜினி சென்ற புகைப்படம் ஏற்கனவே வெளியாகின.

இந்நிலையில், இமயமலையில் உள்ள பாபாஜி குகைக்கு செல்வதற்காக போலீஸ் பாதுகாப்புடன் சுமார் இரண்டு மணி நேரம் ரஜினிகாந்த மலையேறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், அவர் பாபா குகையில் அமர்ந்து தியானம் செய்துபோன்ற செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

logo
Andhimazhai
www.andhimazhai.com