போக்குவரத்துக் கழக ஊழியர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!
போக்குவரத்துக் கழக ஊழியர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!

ஞாபகம் வருதே... நடத்துனராக வேலைசெய்த இடத்தில் ரஜினி!

பேருந்து நடத்துநராகப் பணியாற்றிய பணிமனைக்குச் சென்று, பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுடன் தனது பழைய நினைவுகளை நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்டார்.

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பாக, பெங்களூரு போக்குவரத்து சேவையில் நடத்துனாராக பணியாற்றி வந்தார். சிவாஜிராவ் கெய்ட்வாட் என்ற இயற்பெயர் கொண்ட ரஜினி தன்னுடைய 22 வயது வரை பெங்களூரில் தான் இருந்தார். அதன் பிறகே,சென்னை வந்தார்.

இந்நிலையில், ‘ஜெயிலா்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினி, தான் ஏற்கெனவே பணியாற்றி வந்த பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து பணிமனைக்கு வருகை தந்தாா். அந்த அலுவலகத்துக்கு முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென நுழைந்த நடிகர் ரஜினிகாந்த், அலுவலகத்துக்குள் வரலாமா என்று அனுமதி கேட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்தைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த ஊழியர்கள், அதிகாரிகள் ஆரவாரம் செய்து, அவரை வரவேற்றனர்.

பணிமனையில் பணியாற்றியபோது ஏற்பட்ட சில அனுபவங்களை ஊழியர்கள், அதிகாரிகளோடு பகிர்ந்துகொண்ட நடிகா் ரஜினிகாந்த், அவர்களோடு செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com