அஜித் எடுத்த ரிஸ்க்... விடாமுயற்சி மேக்கீங் வீடியோ வெளியீடு!

அஜித் எடுத்த ரிஸ்க்... விடாமுயற்சி மேக்கீங் வீடியோ வெளியீடு!

விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை, அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட, அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்திற்காகப் பெரிய பட்ஜெட்டை ஒதுக்கியிருந்தது லைகா. அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உட்படபல நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

விடா முயற்சியின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படம் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளியாக தொடங்கியுள்ளது. அந்த வகையில், தற்போது அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கார் சேசிங் காட்சி ஒன்றில் அஜித் டூப் போடாமல் நடித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் நடிகர் ஆரவ், கைகள் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருக்க, அஜித் அதிவேகத்தில் காரை ஓட்டுகிறார். வீடியோவின் இறுதியில் கார் நிலைதடுமாறி கவிழ்கிறது. இது விபத்தாக நடந்ததா அல்லது படப்பிடிப்புக்காக காரை வேண்டுமென்றே அஜித் கவிழ்த்தாரா என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

கார் கவிழந்ததை தொடர்ந்து, அஜித் மற்றும் ஆரவ் ஆகிய இருவரையும் மீட்க படக்குழுவினர் ஓடுகிறார்கள். இந்த வீடியோவானது சமூக ஊடகங்ளில் வைரலாகி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com