ஏ.ஆர். ரகுமான்
ஏ.ஆர். ரகுமான்

இந்திய அணிக்கு இப்படியொரு வாழ்த்தா...? ஏ.ஆர்.ரகுமான் ஸ்பெஷல்!

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஏ.ஆர்.ரகுமான் தன் பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடந்த இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாட திரைப் பிரபலங்களில் இருந்து அரசியல் பிரபலங்கள் வரை இந்திய அணியை பாராட்டி சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றன.

அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது பாணியில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்காக பிரத்யேக வீடியோ ஒன்றை அவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அவரது இசையில் வெளிவந்த ‘மைதான்’ படத்தில் இடம்பெற்ற ‘Team India Hai Hum’ என்ற பாடலை தனது குழுவினருடன் இணைந்து பாடி, அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த பாடல் சுமார் 3.37 நிமிடங்கள் கொண்டுள்ளது. அதில் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது இசைக்குழுவினர் முழு உற்சாகத்துடன் பாடி அசத்தியுள்ளனர். இது தற்போது இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com