
விஜய்யின் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படத்தின் பிரதீப் மீது தென்னிந்திய படத்தொகுப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த வாரம் பெரும் பிரச்னையாக எழுந்த இந்த விவகாரத்தில் காவல்துறை இளநிலை படத்தொகுப்பாளர் ஒருவரைக் கைதுசெய்தது. அவர் வேறு படங்களிலும் இப்படத்திலும் பணியாற்றும் ஒரு சுயேச்சை முறை படத்தொகுப்பாளர் என்பது தெரியவந்தது.
அவரை முக்கிய குற்றவாளி என காவல்துறை தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டன.
இதனிடையே, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம்- பெப்சியின் தலைவர் ஆர்.கே. செல்வமணியுடன் இணைந்து படத்தொகுப்பாளர்கள் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தனர்.
அதில், படத் தொகுப்பாளர்கள் மீது மொத்த சந்தேகமும் தெரிவிப்பது தவறு என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜனநாயகன் படத் தொகுப்பாளர் பிரதீப் ராகவை சங்கத்திலிருந்து இடைநீக்கம் செய்வதாக படத்தொகுப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. அவர் மீது தவறு ஏதும் இல்லை என்றாலும், சங்க உறுப்பினர் அல்லாதவரை வைத்து வேலைசெய்ததற்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் கூறியிருக்கிறது.