
விஜய்க்கு ஆதரவாக நடிகர் ரவி மோகன் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு இன்னமும் சென்சார் கிடைக்காத நிலையில், ஜனவரி 9ஆம் தேதி படம் வெளியாகாது என தயாரிப்பு நிறுவனம் கூறிவிட்டது.
இந்நிலையில், ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள பராசக்தி படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் ரவி மோகன் தனது முழு ஆதரவும் விஜய் அண்ணனுக்குத்தான் என எக்ஸ் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும், விஜய் அண்ணா படம் எப்போ வருதோ அப்போ தான் பொங்கல் என்றும் ரவி மோகன் தனது ட்வீட்டில் பதிவிட்டுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: "ஹார்ட் ப்ரோக்கன் விஜய் அண்ணா, ஒரு தம்பியா உங்களோடு துணை நிற்கும் பல லட்சம் தம்பிகளோடு நானும் ஒருவனாக துணை நிற்பேன்; உங்களுக்கு எந்த தேதியும் தேவையில்லை, நீங்கதான் ஓபனிங்கே. ஜன நாயகன் படம் எப்போ வருதோ அப்போ தான் பொங்கல் ஆரம்பிக்கும்." என ரவி மோகன் உருக்கமான பதிவை பதிவிட்டு தனது முழு ஆதரவையும் அளித்துள்ளார்.
ஏற்கனவே இயக்குநர்கள் அஜய் ஞானமுத்து, வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சிபிராஜ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவாக தங்கள் குரலை பதிவு செய்துள்ளனர்.