‘அரை பாட்டில் பீரை குடித்துவிட்டு இளையராஜா போட்ட ஆட்டம்!’ -ஒரு கலகல அனுபவம்!

ரஜினிகாந்த் - இளையராஜா
ரஜினிகாந்த் - இளையராஜா
Published on

’ஜானி’ பட சூட்டிங்கின் போது தாங்கள் செய்த அட்டகாசம் குறித்து ரஜினிகாந்த், இளையராஜா இருவரும் கலகலப்பாக பேசியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இசைஞானி இளையராஜாவிற்கு பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், நாசர், கார்த்திக், பிரபு என பல நடிகர்கள், இயக்குநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய இளையராஜா, “சூப்பர் ஸ்டார் ரெண்டு நாள் முன்னாடி எனக்கு ஃபோன் செய்து, நாம பண்ணது எல்லாத்தையும் சொல்லப்போகிறேன் என்றார்...’’ எனச் சொல்லி நிறுத்தி ரஜினியை பார்த்து, ”நீங்க சொன்னதை சொல்லிவிடவா” என்று இளையராஜா கேட்க, ரஜினி சிரித்துக்கொண்டே தலையசைக்க அரங்கில் அப்படியொரு சிரிப்பலை.

அதைத்தொடர்ந்து பேசிய இளையராஜா “நீங்க, நான், மகேந்திரன் மூன்று பேரும் சேர்ந்து கொண்டு குடித்தோம். ’அரை பாட்டில் பீர் குடித்துவிட்டு நீங்க போட்டா ஆட்டம் இருக்கே... அதை பற்றி மேடையில் சொல்லப்போகிறேன்’ என்றார். நான், உடனே என்ன வேண்டுமானாலும் சொல்லுங்க எனக்கு கவலை இல்லைன்னு சொல்கிட்டேன்,’ என இளையராஜா பேசிக்கொண்டு இருக்க, ரஜினி எழுந்து சென்று, அவரிடம் இருந்து மைக்கை வாங்கிப் பேசினார்.

அரைபாட்டில் பீர்

இளையராஜா
இளையராஜா

விஜிபியில் ஜானி படத்திற்கான கம்போசிங் போய்க்கொண்டிருந்தது. நான் படபிடிப்பை முடித்துவிட்டு அங்கேயே தங்கியிருந்தேன். மாலை இவரும் மகேந்திரனும் வந்தார்கள். நானும் மகேந்திரனும் டிரிங்க்ஸ் குடித்தோம். இவரிடம் கேட்டோம் ‘சாமி... என்னானுஇளையராஜாவிடம் கேட்டோம், 'சாமி... என்னனு' கேட்டோம். உடனே அவர்... ‘ம்ம்ம்னு...’ சொன்னார். அரை பாட்டில் பீர் அடிச்சிட்டு இவர் போட்ட ஆட்டம் இருக்கே... அய்யயோ, அய்யோ நைட் 3 மணி வரைக்கும். அப்போ மகேந்திரன், ராஜா அந்த பாட்டு இருக்கே என்கிறார்... இவர்... அட சும்மா இருங்க சார்னு சொல்லிட்டு, ஊரில் இருக்கும் கிசுகிசு பத்தி எல்லாம் பேசுகிறார். முக்கியமா ஹீரோயின்கள் பத்தி பேசுகிறார். அண்ணனுக்கு பெரிய லவ்... அதுதான் இந்த பாட்டு எல்லாம், இன்னும் நிறைய இருக்கு, எல்லாத்தையும் அடுத்த முறை சொல்கிறேன்.” என்று ரஜினி சொன்னதும் மொத்த அரங்கமே குலுங்கி சிரித்தது.

பழைய நண்பர்கள் கூடினால் எப்படி கொண்டாட்டமாக இருக்குமோ அப்படி இருந்தது விழா.

logo
Andhimazhai
www.andhimazhai.com