ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார்! - அப்பல்லோ மருத்துவமனை!
நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை சீராக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
உடல் நலக்குறைவால் நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினியின் உடல் நிலை குறித்து பல்வேறு யூகங்கள் நிலவி வந்த நிலையில், தற்போது அப்பல்லோ மருத்துவமனை இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “ரஜினிகாந்தின் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் இதய வால்வில் ஸ்டெண்ட் பொருத்தப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை அல்லாத முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் அளித்த சிகிச்சை வெற்றிகரமாக முடிவுற்றுள்ளது. அவரின் உடல் நிலை சீராக உள்ளது. இதனால், அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் இன்னும் இரண்டு நாள்களில் வீடு திரும்புவார்.” என்று கூறப்பட்டுள்ளது.