ஜெயிலர் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர்.
ஒரே நாளில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதையை நெல்சன் திலீப்குமார் உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயிலர், பான் இந்தியா படமாக வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டிய பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை நடக்கும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்க போகிறது. இந்த நிகழ்ச்சியில் 1000 ரசிகர்கள் பங்கேற்கும்வகையில் இலவச பாஸ்களையும் சன் பிக்சர்ஸ் வழங்கியுள்ளது.
மாலத்தீவில் சுற்றுலா கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்றைய தினம் சென்னை திரும்பியுள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் சென்சாரும் நடந்து முடிந்துள்ளது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் 2 மணி நேரம் 48 நிமிடங்கள் 47 நொடிகள் நீளம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.