
நடிகர் விஜய்யின் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் பிரபல பாடகர்கள் கலந்துகொள்கின்றனர்.
நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரிலுள்ள புக்கில் ஜலீல் மைதானத்தில் டிச.27 ஆம் தேதி நடைபெறும் எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நிகழ்வில் விஜய், எச். வினோத், அனிருத் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதால் ஏராளமான தமிழர்கள் வருவார்கள் எனத் தெரிகிறது.
இந்த இசை வெளியீட்டு நிகழ்வில் நடிகர் விஜய்யின் 35 ஹிட் பாடல்களுக்கான இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறதாம். இதற்கான சீட்டு விலை இந்திய மதிப்பில் ரூ. 2200-லிருந்து ரூ. 14,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தில் 85ஆயிரத்து 500 சீட்டுகள் உள்ளதாம்.
இந்த நிலையில், விஜய்யின் பிரபலமான பாடல்களைப் பாட நடிகை ஆண்ட்ரியா, பாடகர்கள் விஜய் ஜேசுதாஸ், யோகி பி, ஹரீஷ் ராகவேந்திரா, சரண், சைந்தவி, அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்துகொள்வதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.