கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

“இந்த படத்தை பார்த்ததற்கு எனக்கும் காரை பரிசளித்திருக்க வேண்டும்”: ஜெயிலர் குறித்து கார்த்தி சிதம்பரம்!

‘ஜெயிலர்’ திரைப்படம் குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்திருப்பதை ரஜினி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் உலக அளவில் ரூ.600 கோடி வசூலித்தது.

இப்படத்தின் வெற்றியை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் உயர் ரக சொகுசு கார்களை பரிசாக வழங்கினார்.

இந்த நிலையில், அண்மையில் இப்படம் ஓடிடியிலும் வெளியானது. பலரும் இந்த படத்தைப் பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேற்று இரவு ஒரு தமிழ் திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பார்த்ததற்கு படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ஒரு சொகுசு காரை பரிசாக அளித்திருக்க வேண்டும்” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் பலரும் அவர் ‘ஜெயிலர்’ திரைப்படத்தைத்தான் சொல்கிறார் என்று கூறி அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதில் சில உங்கள் பார்வைக்கு:

சால்ட் சிட்டி

என்னதான் கோபம் இருந்தாலும் இந்த நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு sir

மார்லே

சார் அப்டி பார்த்தா உங்களுக்கு ஓட்டு போட்டதுக்கு சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு நீங்க தான் ஆளுக்கு ஒரு கார் வாங்கி தரணும்

சுமன்

இவர் கொடுத்த விமர்சனத்துக்குத்தான் காரே கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் தயாரிப்பாளர்.

பழனி மாணிக்கவேல்

அப்படியே தமன்னாவுக்கும் சேர்த்து ஒரு கார் கேளுங்க எம்பி சார்

logo
Andhimazhai
www.andhimazhai.com