ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

சன்னியாசிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம்! - ரஜினிகாந்த்

வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சன்னியாசிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை முடித்து கொண்டு உத்தர பிரதேசத்திற்குச் சென்றார். அங்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கச் சென்ற ரஜினிகாந்த், அவர் காலில் விழுந்து வணங்கினார்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில், தனது 12 நாள்கள் ஆன்மிக பயணத்தை முடித்துக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி கூறியதாவது, “நான்கு ஆண்டுகள் கழித்து இமயமலைக்கு சென்று வந்தது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது. ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றி அடையவைத்த தமிழ் மக்களுக்கும், உலகத்தில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றவரிடம், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த விவகாரம் சர்ச்சை ஆகியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ரஜினி, “வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சன்னியாசிகள், யோகிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். அதைத்தான் செய்தேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com