ரஜினிகாந்த் 170: இணைந்தார் பகத் பாசில்!

ரஜினிகாந்த் 170: இணைந்தார் பகத் பாசில்!

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்தில் பகத் பாசில் இணைந்துள்ளார்.

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்க உள்ளார். இந்த படத்திற்கும் அனிருத்துதான் இசை அமைக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. படப்பிடிப்பு வரும் 4 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக செட் அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகளை மட்டும் படமாக்க உள்ளனர். அது முடிந்ததும் படத்தின் மற்ற படப்பிடிப்பை கன்னியாகுமரி, நாகர்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியான நிலையில் படத்தில் நடிகைகள் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், நடிகர் ராணா டகுபதி ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் பகத் பாசில் நடிக்க உள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. மாமன்னன் திரைப்படத்தின் மூலம் பகத் பாசில் தமிழ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com