இந்தியன் - 2 படத்தின் அறிமுக வீடியோவை வெளியிடும் ரஜினிகாந்த்
இந்தியன் - 2 படத்தின் அறிமுக வீடியோவை வெளியிடும் ரஜினிகாந்த்

‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக வீடியோவை வெளியிடும் ரஜினி!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோவை ரஜினிகாந்த் நாளை மாலை வெளியிடுகிறார்.

ஷங்கர் இயக்கும் இந்தியன் -2 படத்தில் கமல்ஹாசன், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர். லைகா பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியன்-2 படம் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியன் - 2 அறிமுக விடியோவை நடிகர் ரஜினிகாந்த் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேபோல், தெலுங்கில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி வெளியிடுகிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com