ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்
ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்

பிரம்மாண்டமாக நடந்த ஷங்கர் வீட்டு திருமணம்… வரிசை கட்டி வந்த பிரபலங்கள்!

இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா ஆகியோர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.

இயக்குநர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா. இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு, சினிமாவில் நடிகையாக உள்ளார்.

மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித்துக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சில பிரச்சினைகள் காரணமாக ஐஸ்வர்யா திருமணமான ஆறு மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதனைத் தொடர்ந்து, திருமண பணிகளில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டார். பல முக்கிய பிரமுகர்களுக்கு திருமண அழைப்பிதழை நேரில் சென்ற்உ வழங்கினார். மேலும் திருமண விழாவையும் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில் இன்று சென்னையில் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் வாழ்த்த நெரில் சென்ற நடிகர் ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் வாழ்த்த நெரில் சென்ற நடிகர் ரஜினிகாந்த்

மேலும் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,சூர்யா,கார்த்தி,விக்ரம், விஷால், அர்ஜுன் இயக்குநர்கள் பாரதிராஜா,மணிரத்னம் -சுஹாசினி, கே. கே. பாக்யராஜ், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், ஹரி, விஷ்ணு வர்தன், விக்னேஷ் சிவன் - நயன்தாரா, ரவி குமார், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினர்.

ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் வாழ்த்த நெரில் சென்ற நடிகர் கமல்ஹாசன்
ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் வாழ்த்த நெரில் சென்ற நடிகர் கமல்ஹாசன்
ஷங்கர் மகள் திருமண விழாவில் விக்ரம். மணிரத்னம் -சுஹாசினி
ஷங்கர் மகள் திருமண விழாவில் விக்ரம். மணிரத்னம் -சுஹாசினி
ஷங்கர் மகள் திருமண விழாவில் விக்கி - நயன் தம்பதிகள்
ஷங்கர் மகள் திருமண விழாவில் விக்கி - நயன் தம்பதிகள்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com