தங்கலான் டீசர்
தங்கலான் டீசர்Office

‘பேராசை அழிவுக்கு வழிவகுக்கும்...' மிரட்டும் தங்கலான் டீசர்!

ப.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள படம் தங்கலான். இப்படத்தின் கதை 19ஆம் நூற்றாண்டில் நிகழ்வதுபோல் படமாக்கப்பட்டுள்ளது. அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷனும் தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

கட்டுமஸ்தான உடலுடன், சடை முடியுடன் தோன்றும் விக்ரம் ராஜநாகம் ஒன்றை முறுக்கிக் கிழித்துப்போடும் காட்சியிலும், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு முன்பு நடந்து வரும் காட்சியிலும் மிரட்டியிருக்கிறார்.

கற்பாறைகளும், புழுதி பறக்கு வறண்ட நிலவியலும் கவனத்தை ஈர்க்கிறது. ‘புராணம் வரலாற்றிற்கு இட்டுச் செல்கிறது’, ‘பேராசை அழிவுக்கு வழிவகுக்கும்’, ‘விடுதலைக்கு வித்திடும் குருதி யுத்தம்’ போன்ற வசனங்கள் டீசருக்கு பலம் சேர்க்கிறது. ரத்தும் தெறிக்கும் இந்த டீசரில் புத்தர் சிலை, சடங்கு, நடனம் போன்றவை கவனத்தை ஈர்க்கிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com