தங்கலான் திரைப்படத்தின் போஸ்டர்
தங்கலான் திரைப்படத்தின் போஸ்டர்

தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் நடிகர் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் நடிக்கின்றனர். ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தங்கலான் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் டீசர் வரும் நவம்பர் 1 ஆம் தேதி வெளியகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com