‘மா.பொ.சி’ படத்தின் பெயர் ‘சார்’ என்று மாற்றம்!
‘மா.பொ.சி’ படத்தின் பெயர் ‘சார்’ என்று மாற்றம்!

‘மா.பொ.சி.’ பெயர் ‘சார்’ ஆனது ஏன்?

விமல் நடிக்கும் ‘மா.பொ.சி’ படத்தின் பெயர் ‘சார்’ என்று மாற்றப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘மா.பொ.சி’ படத்தை வெற்றிமாறன் தயாரிக்கிறார். சித்துகுமார் இசையமைக்கிறார். இந்தப் படம் விரைவில் வெளிவரும் என சொல்லப்பட்ட நிலையில், படத்தின் தலைப்புக்கு, ம. பொ.சி. குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ‘மா.பொ.சி’ படத்தின் பெயர் ‘சார்’ என்று மாற்றப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் பெயரை மாற்றியுள்ளோம் என்று அறிவித்துள்ள படக்குழு, படத்தின் புதிய தலைப்புடன் கூடிய போஸ்டர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விமல் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com