சினிமா
திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி 7,பேர் உயிரிழந்ததற்கு நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கூலி படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் செல்ல சென்னை விமானநிலையம் வந்த ரஜினியிடம் திருவண்ணாமலை நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு, எப்போது? என்று கேட்ட ரஜினி பின்னர் ‘ஓ மை காட்’ என்று வருத்தம் தெரிவித்தார்.
பின்னர், கூலி மற்றும் அடுத்த படம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், ‘கூலி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக தற்போது செல்கிறேன். அடுத்த படம் இல்லை. கூலிக்கு பிறகுதான் எல்லாம்' என்றார்.