நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

நாளை வரலாற்றில் மறக்க முடியாத நாள்! – ரஜினிகாந்த் பெருமிதம்

நாளை நடைபெறும் அயோத்தி கோயில் கும்பாபிஷேகம் வரலாற்றில் மறக்க முடியாத நாள் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமா் சிலை பிரதிஷ்டை நாளை நடைபெறுகிறது. இந்த கோலாகல நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 8,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனா்.

இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதையொட்டி, பாஜக, ஆா்எஸ்எஸ் சாா்பில் பொதுமக்களுக்கும், பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும் அயோத்தி ராமஜென்மபூமி அறக்கட்டளை சாா்பில் அனுப்பப்பட்ட அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, அக்‌ஷய் குமார், கங்கனா ரணாவத், டைகர் ஷெராஃப், ஜாக்கி ஷெராஃப், ஹரிஹரன், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் ரந்தீப் ஹூடா உள்ளிட்ட பல திரை பிரபலங்களுக்கு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து புறப்பட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நாளை நடைபெறும் அயோத்தி கோயில் கும்பாபிஷேகம் வரலாற்றில் மறக்க முடியாத நாள் என்றார்.

ரஜினிகாந்துடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் அவரது பிள்ளைகள் இருவரும் சென்றுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com