ரஜினிகாந்த்
சினிமா
ரஜினியின் வேட்டையன் படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியானது!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் ரன்னிங் டைம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா தயாரித்த இப்படம் வருகிற அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. விரைவில் டிரெய்லர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். 2 மணி நேரம் 47 நிமிடம் ரன்னிங் டைம் கொண்ட திரைப்படமாக வேட்டையன் உருவாகியுள்ளது.