நடிகர் பிரபு
நடிகர் பிரபு

யார் சூப்பர் ஸ்டார்…? யார் சூப்பர் நடிகர்…? – பிரபு கொடுத்த புது விளக்கம்!

நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் எனவும் மற்ற நடிகர்கள் சூப்பர் நடிகர்கள் என்றும் நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு விஜய், அஜித் ரசிகர்கள் சமூவலைதளத்தில் அடித்துக் கொள்வது வழக்கம்.

கடந்த 28 ஆம் தேதி நடைபெற்ற ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், "சூப்பர் ஸ்டார் பட்டம் என்றைக்குமே தொல்லை தான். ரொம்ப காலம் முன்பு சூப்பர் ஸ்டார் பட்டத்தை நீக்க சொன்னேன். அப்போது சிலர் ரஜினி பயந்துவிட்டதாக கூறினார்கள். நான் இரண்டு பேருக்கு மட்டுமே பயப்படுகிறேன். ஒருவர் கடவுள், மற்றொருவர் நல்ல மனிதர்கள்” என பேசியிருந்தார்.

இந்நிலையில், பாண்டிச்சேரியில் கல்யாண் ஜூவல்லர்ஸ் திறப்பு விழாவில் நடிகர் பிரபு, ரெஜினா இருவரும் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பிரபு, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த கேள்விக்கு, "எங்க அண்ணன் ரஜினி, சூப்பர் ஸ்டார். மற்றவர்கள் எல்லாம் சூப்பர் நடிகர்கள். ரஜினி சார் என்ன சொல்லியிருக்கிறார்... நான் அதே இடத்தில் இருக்க முடியாது. யாராவது வரவேண்டும் என்று தானே சொல்கிறார். ரஜினி சார் வழிவிடுகிறார்.

தேவர் மகன் படத்தில் அந்த சீட் போனதுக்கு அப்புறம் சின்ன தேவர் வந்து உட்காருவார். விஜய்யும் இருக்காரு, அஜித்தும் இருக்காரு. அவுங்கவுங்க லெவலுக்கு எங்க நிற்க முடியுமோ அங்கே இருக்கட்டும்" எனப் பதிலளித்தார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com