“எல்லோரும் நல்லா இருப்போம்…!” – ஜனநாயகனின் புத்தாண்டு வாழ்த்து!

ஜனநாயகன்
ஜனநாயகன்
Published on

ஜனநாயகன் படக்குழுவினர் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் விஜய்யின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் வருகின்ற ஜன. 9 ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.

முழுநேர அரசியலுக்கு வந்த பின் விஜய் நடிப்பில் வெளியாகும் இறுதியான திரைப்படம் ஜனநாயகன் என்பதாலும் இனி விஜய்யை திரையில் எப்போது பார்ப்போம் எனத் தெரியாததாலும் அவரின் ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக ஜனநாயகன் படத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிலையில், விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், புதிய போஸ்டரை ஜனநாயகன் படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில், “நல்லா இருப்போம், நல்லா இருப்போம், எல்லோரும் நல்லா இருப்போம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஜன நாயகன் படத்தின் டிரைலர் நாளை (ஜன. 2) வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com