பிகார் துணை முதலமைச்சர் விஜய் குமார் சின்ஹாவுக்கு இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாக ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
‘சிறப்புத் தீவிரத் திருத்தம்’ என்ற பெயரில் பிகாரில் 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணைம் நீக்கியிருப்பதோடு அது தொடர்பான விவரங்களை வெளியிட மாட்டோம் என நீதிமன்றத்தில் பதில் கூறியிருப்பது விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் புதிய குற்றச்சாட்டை தேர்தல் ஆணையத்தின் மீது வைத்துள்ளார்.
அதவாது பிகார் துணை முதலமைச்சருக்கு இரண்டு வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாகவும், ஒரு வாக்காளர் அடையாள அட்டையில் அவருக்கு 60 வயது இருப்பதாகவும் மற்றொரு அட்டையில் 57 வயது என்று இருப்பதாகவும் தேஜஸ்வி குற்றம்சாட்டியுள்ளார்.
இதில் யார் மோசடியாளர். தேர்தல் ஆணையமா? அல்லது துணை முதலமைச்சரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ள நிலையில், தற்போது தேஜஸ்வி யாதவ் வைத்துள்ள குற்றச்சாட்டு பேசுபொருளாகியுள்ளது.