அஜய் கோயல்
அஜய் கோயல்

பைஜு நிதி அதிகாரி அஜய் கோயல் பதவிவிலகல்!

கல்விசார் தொழில் நிறுவனமான பைஜுவின் முதன்மை நிதி அதிகாரி பதவியிலிருந்து அஜய் கோயல் பதவி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பழையபடி வேதாந்தா நிறுவனத்துக்கே திரும்புகிறார்.

அவர் இந்தப் பதவியை ஏற்ற ஆறு மாதங்களுக்குள் பதவியிலிருந்து விலகியிருப்பது வர்த்தக உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, 2021-22ஆம் நிதியாண்டுக்கான நிறுவனக் கணக்குவழக்கு அறிக்கையைத் தாக்கல்செய்யாததுடன், பல்வேறு தரப்பினரிடம் 120 கோடி டாலர் கடனைத் திரும்பச்செலுத்தாமல் பைஜூ இக்கட்டான நிலையில் இருந்துவருகிறது. இந்நிலையில், அஜய் கோயல் மாற்றப்பட்டு நிறுவனத்தின் நிதிப் பிரிவுத் தலைவர் நிதின் கோனாலி அப்பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

இவர், முன்னதாக ஆகாஷ் கல்விசார் தொழில் நிறுவனத்தின் உத்திவகுப்பு அதிகாரியாக இருந்து, நூறு கோடி டாலருக்கு அதன் பைஜு பிரிவை வேதாந்தாவுக்கு கைமாற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர்.

கடந்த 2021 டிசம்பரில் பைஜுவின் முதன்மை நிதி அதிகாரி பதவியிலிருந்து பி.வி.ராவ் விலகியதை அடுத்து, 16 மாதங்கள் கழித்து அஜய் கோயல் கடந்த ஏப்ரலில் அந்த இடத்தில் நியமிக்கப்பட்டார்.

விரைவில், பைஜுவின் ஆண்டு தணிக்கை அறிக்கை வெளியிடப்படும் என்று அந்த நிறுவனத் தரப்பில் கூறப்படுகிறது. அதில் பைஜுவின் நிலவரம் என்ன என்பது ஓரளவுக்குத் தெரிந்துவிடும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com