முதல்முறை இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் இறக்குமதி!
இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே முதல் முறையாக இருநாட்டு நாணயங்கள் மூலம் கச்சா எண்ணெய் வர்த்தகம் தொடங்கியுள்ளது.
சர்வதேச அளவில் பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி பெரும்பாலும் அமெரிக்க டாலர் மூலமே நடைபெறுகிறது. ஆனால், அன்னிய செலாவணியைப் பெருக்கும் நோக்கில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே ரூபாய் மற்றும் திராம் கரன்சி மூலம் பெட்ரோலிய பரிவர்த்தனை மேற்கொள்ள இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஓப்பாததிற்குப் பிறகு, அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (ADNOC) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) முதல் முறையாக ரூபாய் மதிப்பில் எண்ணெய் பரிவர்த்தனை நடந்திருக்கிறது. இந்தியன் ஆயில் நிறுவனம் ஒரு மில்லியன் பீப்பாய்களில் கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு ரூபாயில் பணம் செலுத்தியுள்ளது.
இந்திய ரூபாய் மற்றும் அமீரக திர்ஹாம்கள் இரண்டும் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்டன. இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் வலுவான எண்ணெய் மற்றும் எரிவாயு உறவைக் கொண்டுள்ளன. மேலும் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கான முக்கிய பங்களிப்பை செய்வது குறிப்பிடத்தக்கது.