ஈரான் - அமெரிக்கா மல்லுக்கட்டு: பங்குச்சந்தை இன்றும் சரிவு!

பங்குச்சந்தை
பங்குச்சந்தை
Published on

மேற்கு ஆசியாவில் நீடித்துவரும் போர் காரணமாக, அந்த வட்டாரத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ஈரானின் மின்னிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை அடுத்து, சிக்கல் பெரிதாகியுள்ளது.

இதனால் அமெரிக்காவிலும் மற்ற பல நாடுகளிலும் பங்குச்சந்தை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இன்று வாரத் தொடக்க நாளன்று சந்தை வர்த்தகத்தைத் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 1300 புள்ளிகள்வரையிலும், தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 440 புள்ளிகள்வரையிலும் வர்த்தகம் சரிந்தது.

இன்று மாலைவரை வர்த்தகத்தின் பாதிப்பு தொடரும் என்றே சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com