ஊட்டியில் அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
Published on

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த மருத்துவமனை சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப்பிரதேசத்தில் அமைக்கப்பட்ட இரண்டாவது மருத்துவமனை ஆகும்.

அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து வருகிறார். அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில், ஊட்டி எச்.பி.எப். பகுதியில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் புதிதாக ரூ.353 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மருத்துவ ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 700 படுகைகள், 10 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் ஊட்டி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப்பிரதேசத்தில் அமைக்கப்பட்ட இரண்டாவது பெரிய மருத்துவமனை இதுவாகும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com