பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
‘சிறப்புத் தீவிரத் திருத்தம்’ என்ற பெயரில் பிகாரில் 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணைம் நீக்கியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இது தொடர்பாக ஜனநாயக சீர்த்திருத்துக்கான அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததது. அதில், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, கடந்த ஜூலை 6ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களைச் சனிக்கிழமைக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், "இந்தியச் சட்டங்களின்படி, இதுபோன்ற நடைமுறையில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலைப் பகிர வேண்டும் என எந்தவொரு சட்டம் அல்லது வழிகாட்டுதல்கள் இல்லை. எனவே, மனுதாரர் இத்தகைய பட்டியலை ஒரு உரிமை போலக் கோர முடியாது.” என்று கூறியுள்ளது.